ARTICLE AD BOX
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பும் தளமாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி செயல்பட்டு வருகிறது. இதற்கேற்ப பயனாளர்களின் வசதி கருதி அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்-ல் தனிப்பட்ட சாட்களிலும் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக CREATE EVENT என்ற அம்சத்தை மெட்டா கொண்டுவந்துள்ளது. குரூப் சாட்களில் மட்டுமே இருந்த இந்த அம்சம் Private Chat – களுக்கும் கொண்டுவரப்பட்டது. இந்த அம்சம் சோதனையில் இருந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்ட், ஐபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.