ARTICLE AD BOX
சென்னை,
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார்.
"வல்லமை" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தில் திவ்ய தர்ஷினி, தீபா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் கருப்பையா முருகனே எழுதியுள்ளார்.
பிரேம்ஜி நடிக்கும் "வல்லமை" படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.