வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

3 hours ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு புள்ளிகளுடன் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன.

இதையும் படிக்க: ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெற்றிபெற்ற இந்திய அணி, இன்று ஐசிசி பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டது. மேலும், வருகிற மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்துடன் விளையாடவிருக்கிறது.

இந்தப் பயிற்சியில் ரோஹித் சர்மா ஈடுபடாதது இந்திய ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் நேரடியாக போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. அதேவேளையில் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார்.

தாயகம் திரும்பிய பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் மீண்டும் அணியினருடன் இணைந்தது இந்திய அணிக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

Read Entire Article