வருமான வரி, ரெப்போ விகிதம் ஓவர்.. அடுத்து ஜிஎஸ்டி வரி குறைகிறது.. அமைச்சர் நிர்மலா குட் நியூஸ்

12 hours ago
ARTICLE AD BOX

வருமான வரி, ரெப்போ விகிதம் ஓவர்.. அடுத்து ஜிஎஸ்டி வரி குறைகிறது.. அமைச்சர் நிர்மலா குட் நியூஸ்

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும், இதற்கான பரிசீலனையின் இறுதி கட்டத்தில் உள்ளோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விரைவில் அன்றாட மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. சமீபத்தில் வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

gst

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கிற்கு பின்பாக பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. சில பொருட்களின் விலை குறைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நிலையில் ஜிஎஸ்டி திருத்தங்கள் காரணமாக பெரும்பாலான பொருட்களின் விலை தொடர்பாக குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. அடுத்த சில தினங்களில் நடக்க உள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் பொருட்களின் விலை பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரைகள்:

உயர்தர கைக்கடிகாரங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருட்களின் மீதான GST விகிதங்களை உயர்த்த GoM பரிந்துரை செய்தது . ₹25,000க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்க GoM முன்மொழிந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ₹15,000க்கு மேல் விலையுள்ள ஷூக்களும் வரி உயர்வு விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் இப்போது உயர்த்தப்படவில்லை. இந்த மாதம் நடக்கும் கூட்டத்தில் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் பல்வேறு பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்:

செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரியை 5 சதவீதம் ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. முன்பு இதன் மீதான வரி 18% ஆக இருந்தது.

மரபணு சிகிச்சையில் ஜிஎஸ்டி விலக்கு:

மரபணு சிகிச்சையில் ஜிஎஸ்டிக்கு முழு விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேவைப்படுபவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மோட்டார் வாகன விபத்து நிதிக்கான பங்களிப்புகளுக்கு விலக்கு:

மூன்றாம் தரப்பு மோட்டார் வாகன பிரீமியத்திற்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் நிதிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கவுன்சில் முன்மொழிந்துள்ளது. அதாவது ஒரு விபத்து ஏற்பட்டு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் அதற்கு நிதி அளித்தால் அதற்கு ஜிஎஸ்டி இல்லை.

வவுச்சர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி

மேலும், வவுச்சர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு எந்த ஜிஎஸ்டியும் பொருந்தாது என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்து உள்ளது. வவுச்சர் மூலம் இனி பொருட்கள் வாங்கலாம். ஏனெனில் அவை பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதில்லை. இது தொடர்பான விதிகளை மேலும் எளிமைப்படுத்த, வவுச்சர்கள் தொடர்பான விதிமுறைகளும் திருத்தப்பட்டு வருகின்றன.

வங்கிகள் மற்றும் NBFC களின் அபராதக் கட்டணங்கள்

கடன் விதிமுறைகளுக்கு இணங்காததற்காக கடன் வாங்குபவர்களிடமிருந்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் (NBFCs) விதிக்கப்படும் அபராதக் கட்டணங்கள் ஜிஎஸ்டிக்கு உட்பட்டது அல்ல என்று கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

பயன்படுத்திய கார்கள், பயன்படுத்திய EVகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்:

GST கவுன்சில் புதிய EV களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியில் பயன்படுத்திய கார்களின் வரி விகிதத்தை தற்போதைய 12% இல் இருந்து 18% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இருப்பினும், இது வணிக நிறுவனங்களால் விற்கப்படும் கார்களுக்கு மட்டுமே. தனிநபர்கள் ஜிஎஸ்டி இல்லாமல் இதுபோன்ற பயன்படுத்திய கார்களை விற்கலாம்.

கேரமலைஸ் செய்யப்பட்ட பாப்கார்ன்:

கேரமலைஸ் செய்யப்பட்ட பாப்கார்ன் 18% ஜிஎஸ்டியை ஈர்க்கும், அதே சமயம் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த 'ரெடி-டு-ஈட் பாப்கார்ன்', பேக்கேஜ் செய்யப்பட்டு பாப்கான்களுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி உள்ளது. இது 12% ஆக உயர்த்தப்படும். மற்ற சாதாரண பாப்கான்களுக்கு 5% விதிக்கப்படும்.

நீண்ட கால காப்பீடு:

குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய நீண்ட கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு GST விலக்கு அளிக்க GoM பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஜவுளி பரிந்துரை:

ஜவுளிப் பொருட்களுக்கான விலை ₹1,500 வரை இருந்தால் அதற்கு 5% வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதன் மாற்றம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ₹1,500 முதல் ₹10,000 வரை விலையுள்ள பொருட்களுக்கு 18 சதவீத வரியை விதிக்க முன்மொழியப்பட்டு உள்ளது. ₹10,000க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கு, 28 சதவீதமாக வரி விதிக்க விதி கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் மாற்றம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

English summary
GST rates will come down further says Finance Minister Nirmala Sitharaman
Read Entire Article