வருண் சக்கரவர்த்தியைப் புகழ்ந்த சுனில் நரைன்!

9 hours ago
ARTICLE AD BOX

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை சுழல் பந்து ஜாம்பவான் சுனில் நரைன் புகழ்ந்து பேசியுள்ளார்.

கேகேஆர் அணியில் 2020இல் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணிக்கும் தேர்வானார்.

கேகேஆர் அணி கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இருந்தார்கள்.

சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சுனில் நரைன் பேசியதாவது:

பல ஆண்டுகளாக நாங்கள் எங்களை நிரூபித்து வருகிறோம். நாங்கள் கூட்டாக நன்றாக பந்து வீசுகிறோம்.

வருண் சக்கரவர்த்தி எங்கள் பக்கம் இருப்பது எப்போதும் நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை, அழுத்தத்தை வருண் எப்போதும் தொடர்ச்சியாக செய்கிறார்.

கேகேஆர் அணி தனது முதல் போட்டியில் ஆர்சிபியை மார்ச்.22இல் எதிர்கொள்கிறது.

71 ஐபிஎல் போட்டிகளில் 83 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி 7.56ஆக இருக்கிறது.

Read Entire Article