ARTICLE AD BOX
வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி.. ஆஸ்திரேலியாவுடன் செமி பைனல்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி 79 ரன்கள் சேர்த்ததால், மொத்தம் 249 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 45.2 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது. வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில், வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ந்ந் பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அடுத்து, "பி" பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் செமி-பைனலில் மோத உள்ளது. இந்த போட்டி மார்ச் 4ஆம் தேதி நடைபெறும்.
இதேபோல், மார்ச் 5ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே இரண்டாவது செமி-பைனல் நடைபெறும். இறுதி போட்டி மார்ச் 9ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva