வருண பகவான் கோணத்தில் படமான கதை: இயக்குனர் தகவல்

12 hours ago
ARTICLE AD BOX

சென்னை: யாக்கை பிலிம்ஸ் கார்த்திக் ஸ்ரீதரன், வான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘வருணன்-காட் ஆஃப் வாட்டர்’. ஜெயவேல் முருகன் எழுதி இயக்கியுள்ளார். ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா நடித்துள்ளனர். ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசை அமைத்துள்ளார். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற கருத்துடன் உருவான இப்படம், வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் ஆடியோ விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் அன்புச்செழியன், இயக்குனர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ கவிதா பங்கேற்றனர்.

அப்போது ஜெயவேல் முருகன் பேசுகையில், ‘நான் கே.பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவன். இது வட சென்னை பின்னணியில் நடக்கும் தண்ணீரை பற்றிய படம். ஆண்டவர் வாட்டர் சப்ளை உரிமையாளர் ராதாரவிக்கும், ஜான் வாட்டர் சப்ளை உரிமையாளர் சரண்ராஜூக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை. படத்துக்கு பின்னணி குரல் கொடுத்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இக்கதையை வருண பகவான் கோணத்தில் இருந்து சொல்கிறோம். சில பாடல்களை பாடிய யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி ஆகியோருக்கு நன்றி’ என்றார்.

Read Entire Article