ARTICLE AD BOX
மிலன்: கடந்த 2015-19ம் ஆண்டுகளில் இத்தாலி நாட்டில் இருந்து பெற்ற விளம்பரங்களுக்காக செலுத்த வேண்டிய வரியை கூகுள் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் விளம்பரம்,சர்வர்கள் பயன்பாடு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளின் மூலம் பெற்ற வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக மிலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தாலிக்கு ரூ.2950 கோடி செலுத்துவதற்கு கூகுள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கூகுளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
The post வரி ஏய்ப்பு புகார் இத்தாலிக்கு ரூ.2950 கோடி செலுத்த கூகுள் முடிவு appeared first on Dinakaran.