வரி ஏய்ப்பு புகாரை தீர்க்க ரூ.2,900 கோடி கொடுக்கும் கூகுள்!

5 days ago
ARTICLE AD BOX

வரி ஏய்ப்பு புகாரைத் தீர்ப்பதற்காக இத்தாலிக்கு 340 மில்லியன் டாலர்கள் கொடுக்க கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் மாபெரும் முன்னணி நிறுவனமான கூகுள் தன் மீதான வரி ஏய்ப்பு விசாரணையைத் தீர்ப்பதற்காக 326 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.2,900 கோடி) கொடுக்க ஒப்புக்கொண்டதையடுத்து அந்த வழக்கை முடித்துக் கொள்வதாக இத்தாலிய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் 2015-2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் முறையாக வரி செலுத்தத் தவறியதற்காக இத்தாலி தலைநகரான மிலன் வழக்குரைஞர்கள் கூகுள் மீது வழக்கு விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானங்கள் குறித்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க...நேபாள மாணவி தற்கொலை எதிரொலி: கல்லூரிக்கு திரும்ப நேபாள மாணவர்கள் தயக்கம்!

இதனை ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ள கூகுள், வரி தணிக்கையுடன் வழக்கு இல்லாமல் தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் சிக்கி வரும் கூகுள் இதற்கு முன்பு பிரான்ஸில் 1 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை அபரதமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க... போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு!

Read Entire Article