வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- கமெண்ட்ஸில் வந்த மிரட்டல்

2 days ago
ARTICLE AD BOX

வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் சங்கீதாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

கிங்ஸ்லி- சங்கீதா

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான 'கோலமாவு கோகிலா" என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

வயிற்றில் குழந்தையுடன் வெளியான படங்கள்

இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அவர்களுடன் புகைப்படங்களுடன் உறுதிச் செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அவ்வப்போது கணவருடன் எடுத்து கொள்ளும் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில், வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் சங்கீதா பச்சை நிற ஆடையில் சில படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மாறாக வாழ்த்துக்களுக்கு நடுவில் ஒருவர் "be carefull mam" என எச்சரிக்கும் வகையில் கருத்து பகிர்ந்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

                

Read Entire Article