வந்தே பாரத் ரயிலின் வேகம் குறைந்துள்ளதா? ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

9 hours ago
ARTICLE AD BOX

Vande Bharat Speed Drop: Passengers Upset, Railway Minister Gives Official Clarification : இந்திய ரயில்வேயில் மாற்றத்தை ஏற்படுத்தியது எது என்றால் அது வந்தே பாரத் தான். அத நவீன வசதிகளுடன் ரயில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுத்ததோடு மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட வந்தே பாரத்தின் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனுடைய உச்சபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ. நாட்டில் சதாப்தி மற்றும் ராஜ்தானி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பிறகு அதிவேகமாக செல்லக் கூடியது வந்தே பாரத் ரயில் தான்.

இந்த நிலையில் தான் வடிவமைக்கப்பட்ட வேகத்திலிருந்து வந்தே பாரத் ரயிலின் வேகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இது குறிதுது எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி பதிலளித்தார். ரயிலின் வேகம் வடிவமைக்கப்பட்ட வேகத்தை மட்டுமின்றி அதன் பாதையிலுள்ள தண்டவாள உள்கட்டமைப்பையும் சார்ந்தது. ரயில் தண்டவாள உள்கட்டமைப்பு பாதிக்கப்படும் பொது ரயிலின் வேகத்திலும் தாக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரயில் பாதைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், தற்போது வந்தே பாரத் ரயில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு 110 கிமீ வேகத்தில் ரயில் இயங்குவதற்கான பாதையின் நீளம் 31,000 கிமீ ஆக இருந்தது. இது இப்போது 80,000 கிமீ ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதுவும் டெல்லியிலிருந்து வாரணாசி வரையில் இயக்கப்பட்டது.

Read Entire Article