கோவை சரளாவுக்கு அடுத்த படியாக வடிவேலுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளவர் தான் சோபனா. குறிப்பாக 'சில்லுனு ஒரு காதல்' படத்தில், வடிவேலு மற்றும் சொப்னாவின் காமெடி அட்ராசிட்டி வேற லெவலில் இருக்கும். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் பிரபலமடைந்த நிலையில், அதன் மூலம் வெள்ளித்திரை வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார்.

திறமையான காமெடி நடிகை என பெயரெடுத்த இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது பற்றி அப்போது வெளியான தகவலில், அவர் உடல் நல குறைவால் கஷ்டப்பட்டதாகவும், பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் மனஅழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஷோபனாவின் அக்கா தனது தங்கை குறித்து பல முக்கியமான தகவல்களை தன்னுடைய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறும் போது... ஷோபனா ஒரு தீவிரமான முருகன் பக்தை. முருகருக்கு உகந்த நாட்களில் விரதம் இருப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். அடிக்கடி உணவருந்தாமல் இருந்து, டீ மட்டுமே குடித்ததால். ஒரு கட்டத்தில் அவருக்கு பித்தம் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாக அவர் சில உடல்நல பிரச்சனைகளையும் சந்தித்தார்.

அதே போல் அவர் வடிவேலு படங்களில் நடிக்கும் போது விவேக்கின் படங்களிலும் நடித்து வந்தார். அப்போது தான் வடிவேலு உடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தார்கள். விவேக் கூட சொல்லியிருக்கிறார், அதாவது என்னுடன் நடிக்கும் போது வடிவேலு கிட்டயும் கேட்டுக்கோ என்று அவர் சொல்லியிருக்கிறார். இதற்கு காரணம் வடிவேலு மற்றும் ஷோபனா இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரி தான்.

வடிவேலு தொடர்ந்து நடித்து வந்தால் ஒரு நிலையில் இவர்கள் இருவரையும் இணைத்து பேச துவங்கி விட்டனர். இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு பலர் தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்தனர்? மேலும் இது போன்ற விஷயங்கள் எங்களை மனதளவில் அதிகம் பாதித்தது. ஷோபனா இறந்த பிறகும் கூட அவளைப் பற்றி சில வதந்திகளை பரப்பினார்கள். அதாவது, அவள் பேயா வந்து எல்லோரையும் பயமுறுத்தி வருகிறார் என்று. இது என்னுடைய அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.