வட கொரிய அதிபருடன் ரஷ்ய உயரதிகாரி சந்திப்பு

9 hours ago
ARTICLE AD BOX

சியோல்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரு நாடுகளும் வரையறுக்கப்பட்ட போர் நிறுத்த கொள்கைக்கு ஒப்பு்கொண்டுள்ளன. போர் நிறுத்தம் எப்போது நடைமுறைக்கு வரும், எந்த இலக்குகள் தாக்குதலுக்கு அப்பாற்பட்டவை என்பது உள்ளிட்டவை இன்னும் தெளிவாக தெரியவில்லை.

வடகொரியா ரஷ்யாவிற்கு தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் வீரர்களை வழங்கி ஆதரவு அளித்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் செர்ஜி ஷோய்கு வடகொரியா சென்றுள்ளார். தலைநகர் பியாங்யாங்கில்அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் உயரதிகாரிகளை அவர் சந்தித்து பேசினார்.

The post வட கொரிய அதிபருடன் ரஷ்ய உயரதிகாரி சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article