வங்கியில நகை அடகு வைப்பதில் உள்ள சிக்கல்.. சென்னையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

2 days ago
ARTICLE AD BOX

வங்கியில நகை அடகு வைப்பதில் உள்ள சிக்கல்.. சென்னையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

Chennai
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கியில் நகை அடகு வைத்தால், மொத்தமாக பணம் கட்டி திருப்புவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதனிடையே சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பிரச்சனை குறித்து பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இது வங்கிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.அப்போது அவர் கூறும் போது, "2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தி.மு.க. மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களில் இறங்கி இருக்கிறது. பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டு பின்பு கையெழுத்து போட மாட்டோம் என்று தெரிவித்தார்கள். தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை..

Chennai Nirmala Sitharaman gold

தாய் வழிக் கல்வியை தான் அது ஊக்குவிக்கிறது. அமித்ஷா கூட, மருத்துவ, இன்ஜினியரிங் படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தை தி.மு.க. பிசினஸ் நோக்கத்தில் அணுகுகிறது. உண்மையில் அவர்களுக்கு தமிழ் மொழி மீது அக்கறை இல்லை.

திமுக தற்போது மொழி பிரச்சினையை கிளப்புவதற்கு மற்றொரு காரணம், இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. கேரளாவும், காங்கிரசை தோற்கடிக்க கங்கணம் கட்டி கொண்டுள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அதனை ஏற்று கொண்டு விட்டார்கள். தமிழ்நாடு மட்டும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதை பொருட்கள் புழக்கம் அதிமாக இருக்கிறது. டெல்லி நிர்பயா, மேற்கு வங்காளத்தில் ஒரு மருத்துவ மாணவி கொலை ஆகியவை இந்தியா முழுவதும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம், இங்கேயே அடக்கப்பட்டு, வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்? உங்கள் கட்சியை சேர்ந்தவர் தானா என்பதனை சொல்ல வேண்டும். போதை பொருளில் முக்கிய நபர் சிக்கி உள்ளார். அதேபோல் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நிச்சயம் நான் சொல்கிறேன், தமிழகத்தில் மத்திய ஏஜென்சிகள் நடத்தும் வழக்குகளில் நிச்சயம் நடவடிக்கை பாயப் போகிறது.

இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று கூறிவிட்டார். ஆனால் திமுக வேண்டும் என்றே, பிரச்சினையை கிளப்புகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கும், வடமாநிலங்கள் பலன் அடைய தானே செய்யும் என்று கேட்கிறீர்கள். மக்கள் தொகை மட்டும் அடிப்படை இல்லை என்பதனை தெளிவாக சொல்கிறேன். அப்படி செய்தால் லடாக் போன்று சிறு, சிறு பகுதிகளுக்கு எம்..பி.க்கள். இருக்காது.

தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பின் ஒரு தன்னதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதன்பின்தான் தொகுதி வரையறையை மேற்கொள்வார்கள். 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது.

ஏற்கனவே ராகுல் காந்தி, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி பிரிக்கப்படும் என்று பிரசாரம் செய்தார். இப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது வெட்கக்கேடானது. இங்கு வந்திருக்கும் கேரள முதல்வரிடம் முல்லைப் பெரியாறு நீர் குறித்து கேட்கலாம் அல்லவா? கர்நாடக துணை முதல்வரிடம் காவிரி நீர் கேட்கலாம் அல்லவா? அதேபோல் எல்லோரிடமும் நீங்கள் கல்விக் கொள்கையை ஏற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம். இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக கூறினார். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், இது வங்க்கிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

தங்க நகை அடகு விவகாரத்தை பொறுத்தவரை, நகையை அன்றே மொத்தமாக பணத்தை கட்டி திருப்பி, மறு நாள் அடகு வைக்கும் நடைமுறை என்பது கந்துவட்டிக்காரர்களுக்கு பணம் தரும் விஷயமாக மாறும் என்றும், மக்கள் ஒரு நாளில் நகையை திருப்பி மறுஅடகு வைக்க, கந்துவட்டிக்காரர்களிடம் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று சில ஆயிரங்களை மொத்தமாக இழக்க வேண்டியதிருக்கும் என்றும், வட்டியும் கட்டி, நகைக்கான பணத்தையும் கட்ட புரட்டுவதற்காக மக்கள் கந்துவட்டிக்காரர்களை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்ற குரல்கள் எழுந்து வருகிறது. மக்களை இந்த நடைமுறை வெகுவாக பாதிக்கும் என்றும் புகார்கள் எழுந்துள்ளன. மக்களால் பணம் கட்டி ஓராண்டில் திருப்ப முடியாமல் போனால், அந்த நகையை அவர்கள் இழக்க வேண்டியது வரும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
English summary
The practical difficulties in repaying the money in bulk when pawning jewelry in a bank have greatly affected people. Many people have been affected by the plan to repay the gold loan in banks and then deposit it again. Meanwhile, Finance Minister Nirmala Sitharaman, who came to Chennai, responded to this problem. She said at the time, "This has been brought in for the benefit of the banks."
Read Entire Article