ARTICLE AD BOX
இன்றைய காலகட்டத்தில் மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அழைப்புகள் மூலம் மோசடி மற்றும் நிதி மோசடி அதிகரித்து வருவதால், இதை தவிர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மற்றும் சந்தைப்படுத்தல் அழைப்புகளுக்கு 2 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின் படி, அனைத்து பரிவர்த்தனை தொடர்பான அழைப்புகளுக்கும் 1600 இல் தொடங்கும் தொலைபேசி எண்களை வங்கிகள் பயன்படுத்த வேண்டும். அதாவது பரிவர்த்தனை அல்லது நிதி விவகாரம் தொடர்பான எந்த ஒரு அழைப்புக்கும் 1600 என்ற எண்ணில் தான் தொடங்க வேண்டும்.
அதேபோன்று மார்க்கெட்டிங் அழைப்புகள், தனிப்பட்ட கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது காப்பீடு போன்ற சேவைகளை வழங்கும் எஸ்எம்எஸ் அறிவிப்புகளுக்கு 140 ல் தொடங்கும் எண்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் மற்றும் தொலைபேசி மோசடி சம்பவங்கள் தடுக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.