ARTICLE AD BOX
பாஜக தலைமையிலான மத்திய அரசு, இஸ்லாமியர்கள் சொத்துக்களை வரையறை செய்யும் வக்பு மசோதா சட்டத்திருத்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த சட்டமசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்க்கட்சியினர் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு பரிசீலனைகள் சொல்லப்பட்டன.
இதையும் படிங்க: எக்ஸ் காதலியை பழிவாங்க நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. விபரீத எண்ணத்தால் கடத்தல், கற்பழிப்பு..!
தற்போது வக்பு மசோதாவை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, தனது அமைச்சரவையின் வாயிலாக கூட்டுக்குழு பரிந்துரைத்த 23ல் 14ஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
சட்டத்திருத்தம் மசோதா
இதன் வாயிலாக மாநிலத்தில் வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிக்க முஸ்லீம் அல்லாத நபர்கள் 2 பேரை உறுப்பினராக நியமனம் செய்ய மசோதா வழிவகை செய்கிறது.
மேலும், வக்பு வாரிய சொத்துக்களை தீர்மானிக்க அரசு அதிகாரியும் நியமனம் செய்யப்படுகிறார். இந்த மசோதா 14 கூட்டுக்குழு பரிந்துரையை ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் மார்ச் 10 அன்று தாக்கல் செய்யப்படுகிறது.
வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்ய, அதில் உள்ள சிக்கல் மற்றும் குளறுபடிகளை சரி செய்ய வக்பு வாரிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: எச்சில் உமிழ்ந்த நீரை கொடுத்து ராகிங் கொடுமை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்.!