ARTICLE AD BOX

சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU-வில் வராது தனி ஒரு கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளிலும் தெரியப்படுத்திவிட்டார். எனவே, படம் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே, இந்த படத்தில் சிறப்பான ஒரு பாடல் இருப்பதாகவும் அந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியிருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். ஆனால், அவர் படத்தில் நடிக்கிறாரா? அல்லது பாடலில் நடனமாடியுள்ளாரா? என்பது பற்றிய எந்த தகவலையும் சொல்லவில்லை.
இருப்பினும் போஸ்ட்டரை வைத்து பார்க்கையிலும், நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் படி அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தான் தெரிகிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டை பார்த்த பலருடைய கேள்வியாக இருக்கும் விஷயம் என்னவென்றால் லோகேஷ் படத்தில் இப்படி ஒரு பாடலா? அதில் நடிகையும் ஆடுகிறாரா? என்பது தான்.
ஆனால், இது லோகேஷ் கனகராஜ் ஐடியா இல்லை படத்தை தயாரிக்கும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வைத்த பாடல் போல தான் தோணுகிறது. ஏனென்றால், இதற்கு முன்பு ரஜினியை வைத்து சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தினை தயாரித்திருந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலில் தமன்னா ஆடியிருந்தார். அந்த பாடல் வெளியான சமயத்தில் இருந்து மிகப்பெரிய ஹிட் ஆகி வேறு மொழிகளிலும் படத்தின் ப்ரோமோஷனுக்கு உதவியது.
Yes, you guessed it right! @hegdepooja from the sets of #Coolie @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv@girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/SThlymSeog
— Sun Pictures (@sunpictures) February 27, 2025
எனவே, அதே மாதிரி ஒரு பாடலையும் கூலி படத்தில் வைத்து அந்த பாடலை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டால் நிச்சயமாக அதே போலவே ஹிட் ஆகி ப்ரோமோஷனுக்கு ஒரு உதவியாக இருக்கும் என்பதால் அதே மாதிரியான பாடலை கூலி படத்தில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.