ARTICLE AD BOX

மாநகரம், கைதி போன்ற படங்களால் தமிழ் சினிமாவிற்கு புதிய வரவாக வந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்து இன்று தமிழ் ரசிகர்களின் அபிமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். படமுழுக்க வன்முறை, ஆக்ஷன் என தொடர்ந்து கமெர்ஷியல் படங்களையே கொடுத்து முன்னணி இயக்குனராக மாறியிருக்கிறார்.
எப்படி ரஜினி, விஜய் என இவர்களுக்கு ஒரு மாஸான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைப் போல் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ். விக்ரம் படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் லோகேஷை வரவேற்க காத்திருந்தார்கள் அங்குள்ள டாப் நடிகர்கள். ஆனால் விக்ரம் படத்திற்கு பிறகு விஜயை வைத்து லியோ படத்தை எடுத்தார்.
லியோ திரைப்படம் லோகேஷின் முந்தைய திரைப்படங்களை போல் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் வசூலில் எப்போதும் போல சாதனை படைத்தது. அடுத்ததாக ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார் லோகேஷ். விக்ரம் படத்தின் வெற்றி ரஜினியையும் சும்மாவிடவில்லை. கமலுக்கு மாஸ் ஹிட் கொடுத்த மாதிரி தனக்கும் அமைய வேண்டும் என ஆசைப்பட்டு சேர்ந்த கூட்டணிதான் கூலி கூட்டணி.
கூலி திரைப்படம் நிச்சயமாக ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் லோகேஷின் ஸ்டைலை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட திரைப்படமாக கூலி இருக்கும். ஏனெனில் லோகேஷின் படங்களை பொறுத்தவரைக்கும் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். அதுவும் ரொமான்ஸ், ஐட்டம் பாடல் என எந்தவித அம்சமும் இதில் இருக்காது.
ஆனால் கூலி படத்தில் ஐட்டம் பாடல் இடம்பெற போவதாகவும் அதில் பூஜா ஹெக்டே ஆடபோவதாகவும் தகவல் வெளியானது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது ஜெயிலர் படத்தில் தமன்னாவுடன் அதிக காட்சிகளில் ஆடமுடியவில்லை என ரஜினி ஒரு மேடையில் வருத்தப்பட்டார். அந்த வருத்தத்தை இந்தப் படத்தின் மூலம் போக்கிக் கொள்வார் ரஜினி என அந்தணன் கூறினார்.
மேலும் தன் படம் ஆக்ஷன் படமாக இருந்தாலும் ஆங்காங்கே செண்டிமெண்ட், கமெர்ஷியல் இருக்க வேண்டும் என விரும்புபவர் ரஜினி. அதனால் இந்த ஐட்டம் பாடல் கூட ரஜினியின் ஐடியாவாகக் கூட இருக்கலாம் என அந்தணன் கூறினார்.