ARTICLE AD BOX
லூசிபர் 2 – எம்புரான் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ். அந்த வகையில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் லூசிபர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் மோகன் லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மாஸான ஆக்சன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து பிரித்விராஜ், எம்புரான் என்ற தலைப்பில் லூசிபர் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு திருவனந்தபுரம், அமெரிக்கா போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. எனவே இந்த படமானது 2025 மார்ச் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் எம்புரான் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மாலை 7.07 மணி அளவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.