ARTICLE AD BOX
லூசிஃபர் படத்தை யாருமே பார்க்க முடியாது.. இவருக்கு வாய்ப்பு கொடுங்க.. ஓப்பனா சொன்ன நடிகர்!
சென்னை: பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் பிருத்விராஜ் பிரபல இயக்குநருக்காக ஈகோ பார்க்காமல் வாய்ப்பு கேட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதவும் அவருக்கு ஹிட் கொடுத்த இயக்குநர் மட்டும் மனதிற்கு நெருக்கமானவர் என அவரே தெரிவித்திருக்கிறார். அந்த இயக்குநர் யார் தெரியுமா!
ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் எம்புரான். பெரும் வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம்தான் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் முதல் மலையாள திரைப்படம்.

முன்பதிவில் சாதனை: லூசிஃபர் படம் வெளியாகி 6 வருடங்கள் கழித்து எம்புரான் படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. நேற்று காலை தொடங்கிய முன்பதிவில் எம்புரான் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இது விஜய் நடித்த லியோ பட டிக்கெட் சாதனையை முறியடித்திருக்கிறது என பிருத்விராஜ் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார். படம் வெளியாகும் முதல் நாளிலேயே ரூ.10 கோடி வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் ரூ.2 கோடி என மொத்தம் 12 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
சர்ப்ரைஸ்: எம்புரான் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கும் பிருத்விராஜ் படத்தின் புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக பிரபல தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இவரை வைத்து தமிழில் அறிமுகம் செய்த மொழி பட இயக்குநர் ராதாமோகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது இதுதான் உண்மையான சர்ப்ரைஸ் என பிருத்விராஜ் தெரிவித்தார். கண்டிப்பா என்னால நம்பவே முடியலை மொழி படம் கொடுத்த வெற்றியை தாண்டி நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தது. ராதா சார் அமேசிங் டைரக்டருங்க என பிருத்விராஜ் தெரிவித்தார்.

வாய்ப்பு கொடுங்க: மொழி படத்தை இன்னைக்கும் டிவியில போட்டா குடும்பத்தோட பார்த்து ரசிக்கிறாங்க. இவர மாதிரி காமெடி சென்ஸ் பார்த்ததே இல்லை என பிருத்விராஜ் ராதாமோகன் பற்றி வியந்து பேசினார். பின்பு அபியும் நானும் படங்கள் குறித்து பேசி மகிழ்ந்தனர். அப்போது பேசிய பிருத்விராஜ், லூசிஃபர் படத்தை குடும்பத்தோட பார்க்க முடியாதுங்க என்றதும் தொகுப்பாளர் ஷாக் ஆனார். ஆனல், பிருத்வி சிரித்துகொண்டே இந்த நிகழ்ச்சிக்காக சொல்லவில்லை. லூசிபர் படத்தை ரசிகர்கள் கொண்டாடும் படம், ஆனால், மொழி மாதிரி படங்களை எல்லாரும் பார்க்கலாம். தமிழ் புரொடியுஷர்களுக்கு சின்ன ரெக்வஸ்ட் ராதாமோகனிடம் நல்ல கதைகள் இருக்கு. கண்டிப்பா ஒரு வாய்ப்பு கொடுங்க மொழி மாதிரி பல படங்களை இயக்குவார் என பிருத்விராஜ் தெரிவித்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் எம்புரான் படத்திற்கு புரோமோஷனுக்கு வந்துவிட்டு மொழி பட இயக்குநருக்கு வாய்ப்பு கேட்பது வித்தியாசமாக இருக்கிறது. இவ்வளவு நல்லவரா என்றும் பேச தொடங்கிவிட்டனர். மொழி படத்தை குடும்பமே கொண்டாடிய படம் தான். ஆனால், லூசிபரை விட்டுகொடுத்திட்டீங்களே சார் என நெட்டிசன்கள் கமாண்ட் செய்துள்ளனர். மேலும், எம்புரான் படத்திற்கு போலாமா வேண்டாமா என்பதையும் நீங்களே சொல்லிடுங்க என ரசிகர்கள் ஜாலியாக கேள்வி கேட்டனர்.