ARTICLE AD BOX
Published : 22 Mar 2025 01:43 PM
Last Updated : 22 Mar 2025 01:43 PM
‘லியோ’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’ - டிக்கெட் புக்கிங் அமோகம்

இந்திய அளவில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை புரிந்திருக்கிறது ‘எம்புரான்’.
இந்தியா முழுக்கவே ‘எம்புரான்’ படத்தின் டிக்கெட் புக்கிங் மார்ச் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியதால், புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஃபுல் ஆனாது.
மேலும், புக் மை ஷோ தளத்தில் ஒரு மணி நேரத்தில் 96.14K டிக்கெட்கள் விற்கப்பட்டு சாதனை படைத்தன. இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் புக் மை ஷோ தளத்தில் அதிக டிக்கெட் விற்பனையானது ‘எம்புரான்’ படத்துக்குதான். இதற்கு முன்பு ’லியோ’ படத்துக்கு 82K டிக்கெட்கள் விற்பனையானது சாதனையாக இருந்தது. தற்போது அதுவும் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்கள் விற்பனையால் முதல் நாளில் ‘எம்புரான்’ படம் அதிக வசூல் செய்யும் என கருதப்படுகிறது. கேரளாவில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் முதல் நாளில் ரூ.6 கோடி இதுவரை வசூலாகி இருக்கிறது. இந்த வசூலால் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைக்கும் என்கிறார்கள். ஏனென்றால் இதற்கு முன்பாக ‘லியோ’ படம் ரூ.12 கோடி வசூல் செய்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எம்புரான்’. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
The Highest Hourly Pre-Sales Ever in Indian Cinemas on BOOKMYSHOW
96.14K/Hr #Empuraan #L2E
BMS - https://t.co/N8VWfpo2bn
Paytm - https://t.co/Fjlf0z8Vtv
District - https://t.co/y1UCD4nLGV
Ticketnew - https://t.co/wvQGWTXGxa#March27 @mohanlal #MuraliGopy @antonypbvr… pic.twitter.com/LRBg5EVjgt
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை