லாபத்தில் திமுகவினர் தொழில்கள்; நஷ்டத்தில் திமுக அரசு - அர்ஜுன் சம்பத் அதிரடி

11 hours ago
ARTICLE AD BOX

Tamil Nadu News: தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம்  இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Tamil Nadu News: 'துரோகம் செய்யும் கம்யூனிஸ்ட்கள்'

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறும்போது,"முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளா மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர். இது தமிழகம் - கேரளா மக்கள் இடையே நல்லுறவை சிதைக்கின்றது. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலையாக இருக்கிறது" என கம்யூனிஸ்ட் கட்சிகளை சாடினார்.

Tamil Nadu News: 'தேனியில் நடமாடும் நக்சலைட்கள்'

தொடர்ந்து பேசிய அவர், "தேனி மாவட்ட காவல்துறையினர் இந்து அமைப்பினர்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். தேனியில் இஸ்லாமியர் பயிற்சி மையம் செயல்படுகிறது. அதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேனி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டில் நடமாட்டம் இருக்கின்றது. அது குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தேனி மாவட்ட காவல்துறையினர் மீது பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் படிக்க | நீயா நானா மும்மொழிக் கொள்கை எபிசோடு நிறுத்தம் - யார் கொடுத்த அழுத்தம்?

Tamil Nadu News: 'இது கடன்கார பட்ஜெட்'

மேலும், தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த நேற்று முன்தினம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பேசிய அவர்,"தமிழக அரசு அறிவித்த பட்ஜெட், கடன்கார பட்ஜெட். 9 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டும் என நிதித்துறை செயலாளர் கூறுகிறார். திமுக குடும்பத்தினர் நடத்தும் தொழில்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகிறது. ஆனால் திமுக அரசு நஷ்டத்தில் இயங்குகிறது" என்றார்.

Tamil Nadu News: பாஜகவின் போராட்டத்திற்கு ஆதரவு

அமலாக்கத்துறை தொடுத்துள்ள டாஸ்மாக் ஊழல் வழக்கு குறித்த கேள்விக்கு,"2ஜி ஊழலை மிஞ்சக்கூடிய ஊழல் இந்த டாஸ்மாக் ஊழல். 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்று இருக்கும். டாஸ்மாக் ஊழலை கண்டித்து நாளைய தினம் (மார்ச் 17 - திங்கட்கிழமை) பாஜக நடத்தும் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | 'பட்ஜெட்டும் ஹிட்... தமிழும் ஹிட்...' லோகோவில் 'ரூ' போட்டது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

Tamil Nadu News: திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

மேலும், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் போது திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்றும் அதனால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

Tamil Nadu News: ரூ.1000 டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் டாஸ்மாக், மதுபான நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வரவில்லை என அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை டாஸ்மாக் சார்ந்த அலுவலகங்களிலும், மதுபான நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், இந்த டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு நாளை போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | டாஸ்மாக் முறைகேடு குறித்து விஜய் வெளியிட்ட புதிய அறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article