லவ் யூ தலைவா: ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனரின் நெகிழ்ச்சிப் பதிவு..

4 hours ago
ARTICLE AD BOX
uriyadi director vijaykumar meets rajinikanth in coolie shooting

லவ் யூ என்பது பேரன்பினால் எழுவது, பெருமகிழ்ச்சியினால் சொல்வது. இதற்கு பாலின பாகுபாடு கிடையாதுங்க. அவ்வகையில் இந்நிகழ்வு பாருங்க..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘கூலி’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை, பிரபல இயக்குனர் சந்தித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் 75% படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை ‘உறியடி’ படம் மூலமாக பிரபலமான விஜய் குமார் சந்தித்துள்ளார். இவர் ‘உறியடி’ படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்து வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 2-ம் பாகத்தில் நடித்தார். இதனிடையே, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போது ரஜினியை சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ‘என்றென்றும் நான் போற்றும் ஒரு தருணம். இறுதியாக கூலி’ படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்தேன். அவரது ஆசியைப் பெற்றேன். லவ் யூ தலைவா. இதற்கு காரணமான நண்பன் லோகேஷுக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார் விஜய்குமார்.

கூலியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அடுத்த இயக்குனர் மணிரத்னமா, மாரிசெல்வராஜா, வெற்றிமாறனா என்பது தலைவரின் கையில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.!

uriyadi director vijaykumar meets rajinikanth in coolie shootinguriyadi director vijaykumar meets rajinikanth in coolie shooting

The post லவ் யூ தலைவா: ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனரின் நெகிழ்ச்சிப் பதிவு.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article