ARTICLE AD BOX
'கூலி’ படத்தின் படப்பிடிப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த இயக்குனர் மற்றும் நடிகர், "லவ் யூ தலைவா" என்று பதிவு செய்து, தனது சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’உறியடி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான விஜயகுமார், லோகேஷ் கனகராஜ் தயாரித்த ’பைட் கிளப்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது, விஜயகுமார், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து, புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அவர்,
"நான் எப்போதும் நினைத்து மகிழும் ஒரு தருணம் இதுதான். ஒரு வழியாக, 'கூலி’ படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். லவ் யூ தலைவா! இதை சாத்தியப்படுத்திய நண்பன் லோகேஷ் கனகராஜுக்கு எனது மிகப்பெரிய நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
A moment I’ll cherish forever! ❤️ Finally met @rajinikanth sir at the #Coolie shooting spot and received his blessings. Love you, Thalaivaa! 🙏 ❤️ ✨ Huge thanks to Nanban @Dir_Lokesh for making this happen. pic.twitter.com/CN2Rcwg64t
— Vijay Kumar (@Vijay_B_Kumar) February 24, 2025