ARTICLE AD BOX
காய்கறிகள் வீட்டில் இல்லாதபோது மசாலா வைத்து ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.இந்த சாதம் குழந்தைகளுக்கும் பிடிக்கும். இதில் ஒதுக்கி வைக்கவும் எதுவும் இருக்காது. அதனால் வாரத்தில் இரண்டு முறையாவது இந்த மாதிரி செய்யலாம். சுவையான மசாலா சாதம் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடலை பருப்பு
சீரகம்
கடுகு
சிவப்பு மிளகாய்
பூண்டு
புளி
துருவிய தேங்காய்
பெருங்காயத்தூள்
வேர்க்கடலை
உளுத்தம் பருப்பு
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
உப்பு
நெய்
செய்முறை
ஒரு பானில் எண்ணெய், கடலை பருப்பு சேர்க்கவும். கடலை பருப்பு வறுபட்டதும் சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், அதில் பூண்டு, புளி சேர்த்து வறுக்கவும்.
இப்போது துருவிய தேங்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். பெருங்காய தூள் மற்றும் கல் உப்பு சேர்க்கவும். வறுத்த பொருட்களை தட்டில் மாற்றி ஆறவிடவும். ஆறியதும் பொருட்களை மிக்சிக்கு மாற்றி சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.
அகலமான கடாயில் எண்ணெய் சேர்க்கவும். வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பிறகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்க்கவும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
இப்போது அரைத்த மசாலா தூள் சேர்த்து வறுத்து கடாயில் சாதம் சேர்த்து மெதுவாக கலந்து நெய் சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் சுவையானசாலா சாதம் ரெடி.