ARTICLE AD BOX
Ukraine Use Sophisticated Drones Against Russia: ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இது தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடம் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. போரை நிறுத்த ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும், மறுபக்கம் உக்ரைன் மீது ரஷ்யா இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு தங்களால் முடிந்த அளவு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவை பொறுத்தவரை முழு அளவிலான வீரர்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்கும் நிலையில், உக்ரைன் இருப்பதை வைத்து சமாளித்து வருகிறது. இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் எடுத்த ஸ்மார்ட்டான ஒரு விஷயம் ரஷ்ய ராணுவ வீரர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.
நிலத்திலும் நீரிலும் பயன்படுத்தும் ட்ரோன்கள்
அதாவது ஒவ்வொரு போரின் போதும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், உக்ரைன் போரில் அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்ய வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. ட்ரோன்கள் என்றால் வழக்கமாக பயன்படுத்தபடுவது தானே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் விதவிதமான அதிநவீன தொழில்நுட்ப ட்ரோன்களை காற்றில் மட்டுமல்ல, நிலத்திலும் நீரிலும் பயன்படுத்த முடியும்.
ரோபோ நாய் ட்ரோன்கள்
பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும் இந்த ட்ரோன்கள் வேகமானவை மற்றும் மிகவும் ஆபத்தானவை ஆகும். இந்த ட்ரோன்கள் வெற்று வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் பிரபலமானது ரோபோ நாய். இது அமெரிக்காவில் காவல்துறையினரால் சந்தேக நபர்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரோபோ நாய்களைப் போலவே அச்சு அசலாக காட்சி அளிக்கிறது. போர்க்களத்தில் உக்ரைன் வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதல், கண்ணி வெட்டிகளை கண்டறிந்து அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோ நாய் ட்ரோன்கள் ஈடுபடுகின்றன.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் என்ன சாப்பிட்டார்?
கண்ணிவெடிகளை வைக்கும் ட்ரோன்கள்
இது தவிர, ஆர்.சி டிரக்குகள் அல்லது போர் பாட்களைப் போல தோற்றமளிக்கும் பல சிறிய சக்கர ட்ரோன்கள் ரஷ்யாவின் பகுதிகளுக்கு சென்று குண்டுகளை வைக்கிறது. கனரக இயந்திர துப்பாக்கிகள் மூலம் ரஷ்ய படை வீரர்களை சுடுகிறது. மேலும் எதிரி டாங்கிகளை சேதப்படுத்த கண்ணிவெடிகளையும் வைக்கிறது. இந்த ட்ரோன்களின் மற்றொரு சுவாரஸ்யமான பயன்பாடு தளவாடங்களை வழங்குவதாகும். வழக்கமாக வீரர்களுக்க்கு ஆயுதங்கள், உணவு, தண்ணீர் வெடி மருந்துகளை லாரிகள் மூலம் வழங்க்ப்படும். இவை எதிரிகளின் பார்வையில் எளிதில் விழும்.
வீரர்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும்
ஆனால் இந்த சிறிய மற்றும் வேகமாக நகரும் ட்ரோன்கள் உணவு, தண்ணீர், வெடிமருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை உக்ரைன் வீரர்களுக்கு எளிதாகவும், விரைவாகும் வழங்குகின்றன. மேலும் சில ட்ரோன்கள் மிச்செலின் போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நவீன காற்றில்லாத டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் கரடுமுரடான மேற்பரப்புகளிலும் சிறப்பாக செயல்படுகின்றன. போரில் இயந்திரங்களின் இயக்கத்தை அதிகரிக்கின்றன.
ரஷ்யாவுக்கு பெரும் தலைவலி
உக்ரைன் ராணுவம் அதிநவீன ட்ரோன்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், பழைய உபகரணங்களை மாற்றியமைத்து புதிய கொடிய ஆயுதங்களையும் உருவாக்கியுள்ளது. உதாரணமாக, டெஸ்லாவின் பாகங்கள், டொயோட்டா மிராயின் எரிபொருள் செல் மற்றும் C-4 வெடிபொருட்களை இணைத்து ஒரு சக்திவாய்ந்த மொபைல் குண்டை உக்ரைன் ராணுவ வீரர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த அதிநவீன தொழில்நுட்ப ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் பயன்படுத்த தொடங்கி இருப்பதால் இது ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்த ட்ரோன்கள் பயன்படுத்துவதன்மூலம் மனித உயிரிழப்புகளும் பெருமளவில் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Israel Hamas War: காஸாவில் இஸ்ரேல் தொடுத்த தாக்குதல், 100 பாலஸ்தீனியர்கள் பலி