ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சேர்வா... வீட்டிலேயே செய்யும் முறை

2 hours ago
ARTICLE AD BOX

தென்னிந்தியாவை பொருத்தவரை பெரிய ஓட்டல்களை விட, ரோட்டோர கடைகளில் சுவை கூடுதலாகவும், விலை குறைவாகவும் இருக்கும். ரோட்டு கடைகளில் கிடைக்கும், மசாலா மணம் நிறைந்த முட்டை சேர்வா இரவு உணவை மறக்க முடியாதாக மாற்றி விடும். பரோட்டா, இடியாப்பம், தோசை, சுடான சாதத்துடன் அற்புதமான சைட்டிஷ் ஆக இருக்கும் .

தேவையான பொருட்கள்:

முட்டை - 4 ( வேக வைத்து தோல் நீக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப்
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

தினமும் இரவில் லேட்டாக தூங்குனா இந்த நோய்களால் பாதிக்கலாம்!!

செய்முறை:

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். மணம் வரும் போது, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வதக்கிய வெங்காயத்தில், இஞ்சி-பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து நன்கு குழையும்படி வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- இந்த மசாலா கலவையில், சற்று தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர், வேக வைத்து தோல் நீக்கிய முட்டைகளை அதில் சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- கடைசியாக, தேங்காய்ப் பால் சேர்த்து, 2-3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இது சேர்வாவுக்கு கூடுதல் சுவையையும், கெட்டியான தன்மையையும் தரும். 
- சூப்பரான ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சேர்வாவை, பரோட்டா, தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற செம காம்பினேஷனாக இருக்கும்.

சிறப்பு குறிப்புகள்:

- முட்டையை கிரேவியுடன் சேர்த்து, மசாலா சேரும் வரை வேக விட வேண்டும்.
- முட்டையை வேக வைத்து தனியாக ஒரு கடாயில் எண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வதக்கி விட்டு எடுத்தும் கூட இந்த கிரேவியுடன் சேர்க்கலாம்.
- தக்காளி சேர்க்கும் முன் சிறிதளவு சீரகத்தூள் வறுத்தால் அதிக மணம் வரும்.
- இறுதியாக சிறிது நெய் சேர்க்கலாம், இது உணவின் ருசியை மேலும் அதிகப்படுத்தும்.

இந்த ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சேர்வா, இரவு உணவை நிறைவானதாக இருக்கும். முட்டையுடன் சாப்பிடுவதால் கொஞ்சம் சாப்பிட்டாலும் கூட நிறைவான உணர்வு ஏற்பட்டு விடும். நீண்ட நேரம் பசிக்காமல் உடலுக்கு நன்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

Read Entire Article