ரோஜா இதழ்களின் மருத்துவ குணங்கள் இதய நோய் முதல் சரும பிரச்சனை வரை தீர்வு..!!

3 days ago
ARTICLE AD BOX

ரோஜா மலர் இதய நோயிலிருந்து நம்மை காக்கும் இதன் இதழ்கள் புண்களை ஆற்றும் உடலுக்கு பலம் தந்து இதயம் நரம்பு மண்டலத்திற்கு நன்மை தரும் தொண்டையில் உள்ள நோய் சளி இரும்பல் சுவாச பிரச்சனையை நிவர்த்தி செய்கிறது…

ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்பு சுவை வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் ரோஜா பூவினால் தயாரிக்கப்படும் குல்கந்து மலச்சிக்கலுக்கு நல்ல பலன் தரும். ரோஜா இதழ்களை அப்படியே மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும் ரத்தம் சுத்தமாகும் சருமம் பளபளப்பாக மாறும். உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்கும் பித்தம் காரணமாக மயக்கம் குமட்டல் வாந்தி நெஞ்செரிச்சல் கோளாறுகளுக்கு இரண்டு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை இருவேளை ஒரு வாரம் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கும். ரோஜா பூவை குடிநீராகி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் வாய் நாற்றம் நீங்கும்…

ரோஜா பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சல் இருக்கும்போது சில துளிகள் விட்டால் எரிச்சல் குறையும் அதிக வியர்வை நாற்றம் ஏற்படும் நேரங்களில் குளிக்கும் நீரில் ரோஜா பன்னீரை கலந்து குடித்தால் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் ரோஜா இதழ்கள் மூல நோய்க்கு மருந்தாகும்.

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை ரோஜா இதழ்கள் மருந்தாக பயன்படுகிறது பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும் உடல் இளமையாகவும் இருக்கும் ரத்தம் சுத்தமாக இருக்க ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட ரத்தம் சுத்தமாகும். செரிமான பிரச்சனை நீங்க ரோஜா இதழ்களை நீரில் கலந்து குடித்து வர செரிமான பிரச்சனை விரைவில் நீங்கும்..

ரோஜா நிறைய கிடைக்கும்போது நிழலில் உலர்த்தி எடுத்து கஷாயம் செய்து சாப்பிட உடம்பிற்கு மிகவும் நல்லது இதனால் வாய்ப்புண் கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் நன்கு பிரியும் சருமம் பளபளப்பாக இருக்கும் மேலும் மேனி அழகாக தோன்றும்..!!

Read Entire Article