ரோகினியின் அம்மா சொன்ன விஷயம், மனோஜ் செய்த செயல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

3 days ago
ARTICLE AD BOX
SiragadikkaAasai Serial Today Episode Update 21-02-25

ரோகினியின் அம்மா சொன்ன விஷயத்தால் ரோகிணி டென்ஷன் ஆகியுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 21-02-25SiragadikkaAasai Serial Today Episode Update 21-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் வெயிட் மிஷின் மேல் ஏறி நின்று வெயிட் பார்க்கின்றனர். இறுதியாக விஜயாவை பார்க்க சொல்ல பார்வதி எங்க எல்லாரோட நீதான் வெயிட் அதிகமாக இருப்ப என்று சொல்ல நீயே நிக்க முடியுது நான் அவ்வளவு வெயிட் இருக்க மாட்டேன் என்று சொல்லி ஏறி நிற்க வெயிட் மிஷின் ரிப்பேர் ஆகிவிடுகிறது. பிறகு அனைவரும் சிரிக்க விஜயாவுக்கு டென்ஷன் ஆகிறது.

உடனே ரதியிடம் மூன்று பேர்ல யார் ஒல்லியா இருக்கிறது நான் தானே என்று கேட்க கொஞ்ச நேரம் யோசித்த ரதி மூணு பேரை குண்டாக இருக்கீங்க என்று சொல்லி விடுகிறார் எனக்கு மீண்டும் அனைவரும் சிரிக்க எல்லாரும் மேல போங்க வரேன்னு சொல்லி அனுப்பி விடுகிறார் பிறகு நான் கொஞ்ச நாள்ல டயட் ஃபாலோ பண்ணி உடம்பு குறைப்பேன் இன்னும் மூணு மாசத்துல நான் இதை செய்வேன் என்று சொல்ல முதல்ல மருமகளே உங்களுக்கு கட்டுப்பாட்டில் வச்சுக்க தெரியல உடம்பு வச்சுப்பீங்களா என உசுப்பேத்தி விடுகிறார் சிந்தாமணி. அதெல்லாம் என்னால முடியும் இது சவால் என விஜயா சொல்லுகிறார்.

மறுபக்கம் ஷோரூமில் ரோகினி மனோஜ் இருக்க ஒரு பெண் கஷ்டமர் கடைக்கு வருவதை பார்த்து மனோஜ் வழிந்து கொண்டு பேசுகிறார் என்ன பார்க்கணும் என்று கேட்க அந்த பெண் டிவி பாக்கணும் என்று சொல்ல ரோகினி நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லுகிறார் ஆனால் மனோஜ் அதெல்லாம் வேண்டாம் நானே கூட்டிட்டு போய் காட்றேன்னு சொல்லி டிவியை காட்டி ஓகே பண்ணி விடுகிறார் பிறகு பில் போடும் இடத்தில் அந்த டிவிக்கு ஆஃபர் இருக்கு அதைவிட ஷோரூம் ஆஃபர் அஞ்சு பர்சன்ட் இருக்கு என்று சொல்ல, அது ரோகினி எப்போதும் இருந்து என்று கேட்க அதெல்லாம் இருக்கு என்று மனோஜ் சொல்லுகிறார்.உடனே அந்தப் பெண் நீங்க ஸ்லிம்மா அழகா இருக்கீங்க என்று சொல்ல மனோஜ் உடனே வெட்கப்படுகிறார் நீங்களும் ஸ்லிம்மா தான் இருக்கீங்க என்று சொல்லிவிட்டு நான் இன்னும் வெயிட் கம்மி பண்ணனும் என மனோஜ் சொல்லுகிறார் நான் ஒரு டயட்டீசியன இருக்க உங்களுக்கு வேணும்னா என்னோட கான்டக்ட் நம்பர் இதுதான் கால் பண்ணுங்க என சொல்ல மனோஜ் அதை வாங்கிக் கொள்கிறார்.

பிறகு நீங்க அஜித் மாதிரி இருக்கீங்க என்று அந்தப் பெண் சொல்ல, உடனே மனோஜ் இன்னும் வழிய ஆரம்பிக்க ரோகினி டவல் கொடுக்கிறார் தொடர்ச்சிக்கோ என்று. பிறகு மனோஜ் பில் கொடுத்து விட இன்னும் 20 நிமிஷத்துல டெலிவரி ஆயிடும் என்று சொல்லி அவரை அனுப்பிவிட உடனே ரோகினி நீங்க அஜித்தா என்று கேட்க ,ஐயோ AK பேன் கோபப்படுவார்கள் அந்த பொண்ணு அப்படி நினைச்சி இருக்கு என்று சொல்லுகிறார். எல்லா ஆம்பளைங்களும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி தான் இருக்கீங்க என்று திட்டிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரோகினிக்கு போன் வருகிறது.

ரோகிணியின் அம்மா போன் போட்டு கிரிஷ்க்கு ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு உன்ன வர சொல்றாங்க என்று சொல்ல நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்கின்றனர் நான் சொல்லிட்டேன் கண்டிப்பா வரணும்னு சொல்றாங்க வீடியோ கால் மூலமாக பேசணும்னு சொல்றாங்க என்று சொல்ல, நான் செத்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே என்று கோபப்படுகிறார். ஏற்கனவே அந்த முத்து வேற அங்க வர ஆரம்பிச்சிட்டான் என்று சொல்ல உடனே ஏண்டி கல்யாணம் இப்படி எல்லாம் பேசுற என்று ரோகிணியின் அம்மா கேட்கிறார். சரி நான் என்ன பண்றதுன்னு பார்க்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

மறுபக்கம் முத்துவின் மீனாவும் கார் ஓட்டிக் கொண்டிருக்க மீனாவிற்கு சொல்லிக் கொடுத்து கொண்டு வருகிறார் முத்து. வரும் வழியில் மீனாவின் தோழி ஒருவர் இருக்க அவரைப் பார்த்து காரை நிறுத்துகின்றனர். அவரிடம் நீ நல்லா கார் ஓட்டுனதுக்கு அப்புறம் தான் நான் உன்னோட கார்ல ஏறுவேன் என்று சொல்ல முத்து பார்த்தல இவ்வளவு நாளா பழகுறாங்க என்ன சொன்னாங்கன்னு பார்த்தியா என்று சொல்ல நான் நல்லாத்தான் ஓட்டுவேன் என்று அங்கிருந்து ஓட்டி வருகிறார் பிறகு அவர் கொஞ்ச தூரத்தில் அவருடன் சேர்ந்து பூ கட்டுபவர்கள் மூன்று பேர் நிற்க அவர்களை காரில் அழைத்து செல்லலாம் என முடிவெடுத்து காரின் ஏற்றுகின்றனர்.

அந்த மூவரும் என்ன பேசுகின்றனர்?அதற்கு முத்து மீனா பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 21-02-25SiragadikkaAasai Serial Today Episode Update 21-02-25

The post ரோகினியின் அம்மா சொன்ன விஷயம், மனோஜ் செய்த செயல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article