ARTICLE AD BOX

ரோகினி கண்ணில் கதிர் சிக்க அவரை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி கார் ஓட்டும் டிரைவிங் ஸ்கூல் விசாரித்து வர அது முத்துவின் டிரைவிங் ஸ்கூல் ஆக இருக்கிறது. மீனா நீங்க அவங்களுக்கு டிரைவிங் சொல்லி கொடுங்க நம்ம ஒன்னும் அடுத்தவங்க வளர்ச்சியை கெடுக்கணும்னு நினைக்கிற ஆள் கிடையாது என்று சொல்லுகிறார். உடனே முத்துவும் சிந்தாமணி இடம் உங்களுக்கும் மீனாவுக்கு தானே தொழில் போட்டி நான் உங்களுக்கு சொல்லி தரேன் என்று சொல்ல நீ இவளோட புருஷன் ஆச்சே எப்படி எனக்கு ஒழுங்கா சொல்லித் தருவ என்று சிந்தாமணி கேட்கிறார்.
நான் என்னோட தொழில்ல கரெக்டா இருப்பேன் நான் உங்களுக்கு சொல்லி தரேன் ஏன்னா நாளைக்கு தொழில்ல மீனா உங்களை விட வளர்ந்து வரும் போது இந்த தொழிலை விட்டு நீங்க போற நிலைமை கூட வரும் அப்போ டிரைவிங் ஸ்கூல் வச்சு கூட நீங்க பொழச்சிக்கலாம் என்று சொல்லி கிண்டல் அடிக்க சிந்தாமணி டென்ஷனாகி சென்று விடுகிறார். மறுபக்கம் ரோகினியும் வித்யாவும் சாப்பிட ஹோட்டலுக்கு வருகின்றனர். முத்து மனோஜை கத்தி எடுத்து குத்த வந்த விஷயம் பற்றிய இருவரும் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் ரோகிணி மற்றும் மனோஜை ஏமாற்றிய கதிர் அதே ஓட்டலுக்கு சாப்பிட வருகிறார்.
இவர்கள் இருவரும் சாப்பிட்டு கிளம்பும் நேரத்தில் கதிரின் குரலை வைத்து ரோகினி அவனைப் பார்த்து விடுகிறார் உடனே அவனிடம் சென்று டாய் பிராடு எங்க பணத்தை ஏமாத்தண இல்ல இப்பவே பணத்தை எடுத்து வைடா என்று கேட்க உடனே அந்த கதிர் நீங்க யாருன்னு எனக்கு தெரியாது நீங்க எதுக்கு என்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கீங்க என்று யாருன்னு தெரியாத மாதிரி பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் ரோகினி யாருடா ஏமாத்த பார்க்கிற என்று சொல்லி, வித்யாவிடம் போலீசுக்கு போன் பண்ணு என்று சொல்லி கதிர் சட்டையை பிடிக்க அவர் ரோகினியை தள்ளிவிட்டு ஓடிவிடுகிறார் பிறகு இருவரும் பின்னாலே ஓடியும் அவரை பிடிக்க முடியவில்லை. வீட்டுக்கு வந்த ரோகினி நடந்த விஷயங்களை மனோஜிடம் சொல்லுகிறார்.
அப்போ இந்த வாட்டியும் பிடிக்கலையா என்று சொல்லிவிட்டு அவன் இந்த ஏரியாவுல தான் சுத்திகிட்டே இருக்கா கண்டிப்பா மாட்டுமா அதுவும் இல்லாம அந்த முத்துமீனா கையில மாற்றத்துக்குள்ள அவனை நம்ம கண்டுபிடிக்கணும் இல்லன்னா காலம் ஃபுல்லா முத்து சொல்லிக் காட்டுவான் அதுவும் இல்லாம அந்த பணத்தையும் முத்து கிட்ட இருந்து வாங்க முடியாது நம்ப தான் கண்டுபிடிக்கணும் என்று இருவரும் சொல்லுகின்றனர். உடனே ரோகினி போலீஸ் ஸ்டேஷன் போலாமா என்று கேட்க போலீஸ்ல ஒன்னும் வேலைக்காகாது அவங்க கண்டுபிடிக்கிற மாதிரி தெரியல நம்ப எதாவது ஒரு சாமியாரை போய் பார்ப்போம் என்று சொல்லிவிட்டு பார்வதி அண்டைக்கு போன் போடு அவங்களுக்கு தான் இதை பத்தி தெரியும் என்று சொல்லுகிறார்.
உடனே பார்வதிக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்லி ஒரு சாமியார் தெரிஞ்சா சொல்லுங்க என்று சொல்ல வெத்தலையில் மை போட்டு பார்க்கும் சாமியார் பற்றி சொல்லி அழைத்து வருவதாக சொல்லுகிறார் உடனே மறுநாள் காலையில் முத்து ரவி என அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க பார்வதி சாமியாருடன் வருகிறார். யாரு ஆன்ட்டி இவரு என்று கேட்க இவர் தொலைந்து போன பொருளை கண்டுபிடித்து தருவாரு என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வர ரோகிணி நேற்று கதிரை பார்த்ததாகவும் நடந்த விஷயத்தை சொல்ல முத்து எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம் என்று சொல்ல உங்க உதவி எங்களுக்கு வேண்டாம் முத்து என்று சொல்லிவிட்டு வெத்தலையில் மை போட்டு பார்க்கின்றனர். அந்த சாமியார் என்ன சொல்லுகிறார்? குடும்பத்தினர் ரியாக்ஷன் என்ன?ரோகினி மனோஜ் என்ன சொல்லுகின்றனர்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post ரோகினி கண்ணில் சிக்கிய கதிர், மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.