ரோகித் கேப்டனா அதுல சரி இல்லை.. இந்திய அணிக்கு சவாலே இனிமேதான் இருக்கு – கங்குலி எச்சரிக்கை

19 hours ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடர் விளையாடி முடித்த பிறகு அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி இந்திய டெஸ்ட் அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டில் அதிக டெஸ்ட் தொடர்கள் விளையாடியது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அதற்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் இழந்தது. கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்ம் இரண்டும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலி தற்போதைய இந்திய டெஸ்ட் அணி சிறப்பாக இல்லை என்று கூறியிருக்கிறார். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் நிலையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில், அவர் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுகுறித்து கங்கிலி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

விஷயத்தை மாற்ற வேண்டும்

இதுகுறித்து அவர் கூறும் போது “கடந்த 4-5 வருடங்களாக ரோஹித் சர்மாவின் சிவப்பு பந்து கிரிக்கெட் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் அந்தஸ்த்து மற்றும் திறமை கொண்ட வீரர். அவர் தற்போது செயல்பட்டு வருவதை விட சிறப்பாக செய்ய முடியும். இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இருப்பதால், அவர் தனது சிந்தனை தொப்பியை அணிய வேண்டும். இங்கிலாந்து தொடர் நிச்சயம் கடினமானதாக இருக்கப் போகிறது.

இதையும் படிங்க:பும்ரா மாதிரி அவர் ஒருத்தர்தான் இருக்காரு.. 70 சதவீத பவுலர்ஸ்க்கு என்ன செய்றோம்னே தெரியல – ஸ்டெயின் பேட்டி

ஆஸ்திரேலியாவில் நிலைமை எப்படி இருக்கிறதோ அதேபோலத்தான் இங்கிலாந்திலும் இருக்கப் போகிறது. சீம் ஆகப்போகிறது, ஸ்விங் ஆகப்போகிறது. இந்திய அணிக்காக அவர் சிறப்பான முறையில் தயாராக வேண்டும். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த வீரர்களில் ஒருவர். தலைமைத்துவம் எப்போதும் முக்கியமானது. ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஏனென்றால் அவர் இந்தியாவை வழி நடத்தும் விதத்தை நான் பார்த்திருக்கிறேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் இந்திய அணியை உயர்த்திற்கு கொண்டு சென்றதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விஷயத்தை மாற்ற வேண்டும். இங்கிலாந்தில் சிறப்பாக விளையாட ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கங்குலி கூறி இருக்கிறார்.

The post ரோகித் கேப்டனா அதுல சரி இல்லை.. இந்திய அணிக்கு சவாலே இனிமேதான் இருக்கு – கங்குலி எச்சரிக்கை appeared first on SwagsportsTamil.

Read Entire Article