ARTICLE AD BOX
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகாவை, அவர் நடித்த முதல் படத்திலேயே நடிகர் ஒருவர் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த சம்பவம் பற்றி பார்க்கலாம்.

Biswajit Kissed Rekha Forcefully : ஜெமினி கணேசனின் மகளான ரேகா 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி பிறந்தார். ரேகா தனது 4 வயதில் இருந்து நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் 15 வயதில் 'தோ ஷிகாரி' படத்தின் மூலம் கதாநாயகியாக தனது பயணத்தைத் தொடங்கினார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வங்காள சூப்பர் ஸ்டார் பிஸ்வஜித் சாட்டர்ஜி நடித்திருந்தார். அப்போது அவருக்கு 32 வயது. அந்த படத்தில் நடித்தபோது நடிகை ரேகாவை நடுங்கவைத்த சம்பவம் பற்றி அவர் தனது சுயசரிதையான ‘ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி’யில் வெளிப்படுத்தியிருந்தார்.

உண்மையில், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, ரேகா பிஸ்வஜித்துடன் ஒரு காதல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிஸ்வஜித்தும், படத்தின் இயக்குனர் குல்ஜித் பாலும் அவரது சம்மதம் இல்லாமல் முத்தக் காட்சியை எடுத்தார்களாம். கேமரா ரோல் என சொன்னவுடன் இருவரும் காதல் காட்சியில் நடித்திருக்கிறார்கள். காட்சி முடிந்தும் இயக்குனர் கட் சொல்லவில்லையாம், இதனால் பிஸ்வஜித் ரேகாவை கட்டாயப்படுத்தி முத்தமிட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ரேகா வேண்டாம் என எச்சரித்தார்கள்; ராகேஷ் ரோஷன் கூறிய ஷாக் தகவல்!

சுமார் 5 நிமிடங்கள் இடைவிடாது முத்தமிட்ட பின்னர், அங்கு இருந்தவர்கள் கை தட்டி விசில் அடித்துள்ளனர். இதனால் ரேகா அதிர்ச்சியடைந்தாராம், ஏனெனில் இந்த முத்தம் பற்றி அவருக்கு முன்பே எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. பின்னர் ஷாட் முடிந்ததும் அவர் கண்ணீர்விட்டு அழத் தொடங்கியிருக்கிறார். பிஸ்வஜித்தின் இந்த செயலால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அப்போது அவர், இயக்குனர் என்ன செய்ய சொன்னாரோ அதைத்தான் செய்தேன் என்று கூறினார்.

இருப்பினும், இந்த நேரத்தில் ரேகா எதுவும் சொல்லவில்லை, ஏனென்றால் அவர் ஏதாவது சொன்னால், தன்னை இந்த படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று நினைத்தார். அதே நேரத்தில், இந்த முத்தம் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக அமைந்தது, ஏனெனில் முத்தக் காட்சி காரணமாக இந்த படம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சென்சார்ஷிப்பில் இழுத்தடித்தார்களாம். 10 ஆண்டுக்கு பின்னர் அப்படம் வெளியானபோதும், அதற்கு சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படத்தால் தயாரிப்பாளர் கடும் நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகை ரேகாவின் லிவ்-இன் ரிலேசன்? யார் அந்த நபர்?