ARTICLE AD BOX
ரெட்ரோ படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து, முடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில் நேற்று (மார்ச் 21) இந்த படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணன் குரலில் கனிமா எனும் பாடல் வெளியானது. காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா, பாரிவேல் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.