ரெட்ரோ: தாய்லாந்தில் தற்காப்பு கலைகளைக் கற்ற சூர்யா..!

3 hours ago
ARTICLE AD BOX

ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார்.

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் படக்குழு நடிகர் சூர்யாவின் அர்ப்பணிப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

எபிசோடு 006: கெசா பொடேட் ஸ்கெட்ச்

லவ் அண்ட் லாஃப்டர்ருக்கு அடுத்து போருக்கான நேரமது. யார் சண்டைப் பயிற்சியாளராக இருந்தால் ரெட்ரோ கூடுதல் சிறப்பாக இருக்கும்? அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் கெசா. ஓன்ங் பாக் 2, பாகுபலி 2 படங்களின் பயிற்சியாளர். இவரது வீடு தாய்லாந்தில் இருக்கிறது. இவரது தயாரிப்பு முறைகள், பொறுமை படப்பிடிப்பில் அற்புதமாக இருந்தன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பல ஜூம் அழைப்புகள் மூலம் சண்டைக் காட்சிகள் குழுவுக்கு புரியும்படி புரியவைத்தார்.

கார்த்திக் சுப்புராஜின் கலைத்தன்மை, அவரது சண்டைக் காட்சிகள் காலத்துக்கும் நினைவிருக்கும்படி வைத்துக்கொள்கிறார். சினிமாவின் அழகு என்பது பலதரப்பட்ட நாடுகளில் இருந்து பலதரப்பட்ட மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான்.

தாய்லாந்து சென்ற சூர்யா

ஓவ்வொரு முறையும் கெசா ‘முடியும் முடியும்’ என்பார். அதற்கு அர்த்தம் ’நீங்கள் கவலைப்பட வேண்டாம், வேலை முடிந்ததாக நினையுங்கள்’ என்பதே.

குறிப்பிட்ட ஸ்டைலுக்காக சூர்யா சார் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்தார். எதைச் செய்தாலும் சரியாக செய்ய நினைக்கும் சூர்யா சார் படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

முக்கியமான ஒரு காட்சியின்போது கோல்டன் அவர் 45 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. அதில் ஒளிப்பதிவாளருடன் சேர்ந்து சவாலை ஏற்று சூர்யா சிறப்பாக செய்து முடித்தார்.

Read Entire Article