ARTICLE AD BOX
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆக முடிந்தது.
அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய சந்தைகளின் ஏற்றம் காரணமாக இந்திய ரூபாய் சற்று உயர்வுடன் வர்த்தகமானதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் லாபம் சற்று குறைத்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.90 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.76 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.90 ஐ தொட்ட நிலையில், முடிவில் 24 காசுகள் உயர்ந்து ரூ.86.81ஆக முடிந்தது.
வியாழக்கிழமை வர்த்தகநேர முடிவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.87.05ஆக இருந்தது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு அந்நிய செலாவணி சந்தை மற்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 5 நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை!