ARTICLE AD BOX
புதுச்சேரியைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவர் இணைய வழியில் வந்த பங்கு வர்த்தகத்தை நம்பி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளார். ஆனால், லாபம் வரவில்லை. போட்ட பணத்தையும் எடுக்க முடியாமல் போயுள்ளது. இதையடுத்து, அது இணைய வழி மோசடிக்காரர்களால் உருவாக்கப்பட்ட போலியான செயலி என்பதை உணர்ந்துள்ளார்.
இதன்பின்னர், இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இழந்த பணத்தில் 75 லட்ச ரூபாய் பணத்தை இணைய வழி போலீசார் மீட்டு கொடுத்தனர் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று இணைய வழி காவல் நிலையம் வந்து காவலர் ஆய்வாளர்கள் ஜலாலுதீன் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி சென்ற ஆண்டுக்கு மட்டும் 30 கோடி ரூபாய்க்கு மேல் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பணத்தை இழந்துள்ளனர். எனவே, இணைய வழியில் வருகின்ற அல்லது சோசியல் மீடியாவில் வருகின்ற சமூக வலைதளங்களில் மூலமாக வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த ஒரு பங்கு வர்த்தகம் மற்றும் பணத்தை முதலீடு செய்யும் செயலில் இறங்கி பணத்தை இழக்க வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.