ARTICLE AD BOX
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியமணலி பகுதியில் வசித்து வருபவர் பிரேம்ராஜ் (வயது 38). இவர் தனியார் வங்கியில் கடன் பிரிவில் வேலை பார்க்கிறார். பிரேம்ராஜின் மனைவி மோகனப்பிரியா (வயது 34). தம்பதிகளுக்கு ப்ரணிதா என்ற 6 வயது மகள், பிரனீத் என்ற 2 வயது மகள் இருக்கின்றனர்.
இவர்கள் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள வாடகை வீட்டில், கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே, தம்பதியின் வீட்டில் மோகனப்பிரியா, அவரின் இரண்டு குழந்தைகள் சடலமாக இருந்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தாய், இரண்டு குழந்தைகள் மரணம்..கடிதம் எழுதி வைத்து மாயமான கணவர்.. நாமக்கல்லில் சோகம்.!
நஷ்டத்தால் சோகம்
மேலும், இதுகுறித்து நடந்த விசாரணையில், பிரேம்ராஜ் நோட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்தது கண்டறியப்பட்டது. கடிதத்தில், "ஆன்லைன் செயலியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எங்களுக்கு ரூ.50 இலட்சம் நஷ்டம் ஏற்பட்டது. கடனை அடைக்கும் வழிமுறை எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னியுங்கள் என கூறப்பட்டு இருந்துள்ளது.
இதனால் குழந்தை, மனைவியை தூக்கிலிட்ட பின்னர், ராஜ் கடிஹம் எஸுதி வைத்து வெளியேறியது தெரியவந்துள்ளது. எனினும், பிரேம்ராஜ் கைது செய்ப்பட்டால் அல்லது அவரை கண்டறிந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என எதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விஷத்துடன் இருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன்.. தற்கொலை செய்தவர் வைத்த மிச்சத்தால் நடந்த சோகம்.!