ARTICLE AD BOX
அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், 'கோல்டு கார்டு' என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக, சுமார் ரூ. 44 கோடி ரூபாய் கொடுத்தால், 'கிரீன் கார்டு' வைத்துள்ளோருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும், இந்த கோல்டு கார்டில் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்க, முதலீட்டாளர் விசாவுக்கு பதிலாக தங்க அட்டை (கோல்டு கார்டு) வழங்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வருவாயை அதிகரிக்கவும், நிதி பற்றாக்குறையை சரி செய்யவும் இந்த புதிய சலுகையினை அவர் அறிவித்து இருக்கிறார். புதிதாக குடியேறும் முதலீட்டாளர்களுக்கு விசாவுக்கு பதிலாக 5 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 44 கோடி) தங்க அட்டை விசா விற்பனை செய்யப்படும் என்றும், இது குடியுரிமைக்கான பாதை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கான தங்க அட்டை இன்னும் இரண்டு வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
டிரம்ப் அரசின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை பணத்துக்காக விற்க முடியுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த அறிவிப்பு இந்தியர்களை அதிக அளவு பாதிக்கும் என கூறப்படுகிறது.