ரூ.200 கோடி சம்பளம் பேசிய டாப் ஹீரோ.. மரத்தடியில் துணி மாற்றிய நடிகை.. 80"கள் பொற்காலம்: பிரபலம்

11 hours ago
ARTICLE AD BOX

ரூ.200 கோடி சம்பளம் பேசிய டாப் ஹீரோ.. மரத்தடியில் துணி மாற்றிய நடிகை.. 80"கள் பொற்காலம்: பிரபலம்

Television
oi-Hemavandhana
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்றைய சினிமா பசுமையாக இருந்தது.. இன்றைய சூழலில், பட்ஜெட் எகிறி, தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள்.. அன்றைய காலம் போல இன்றும் சினிமா இருக்க வேண்டுமானால், நடிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர்வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் வெங்கடேஷ், படத்தயாரிப்பாளர்களின் வலிகள், வேதனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன், 80களில் இருந்த சினிமாதுறை, ஒரு பொற்காலம் என்றும் நினைவுகூர்ந்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

Television Top Hero golden age

"அன்றைய காலகட்டத்தில், பெரிய பெரிய நடிகர்களை, பெரிய டைரக்டர்களை சர்வ சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.. இன்றைய சினிமா தலைகீழாக மாறிவிட்டது. ஆனால், அன்றும், இன்றும் ரஜினி சார் மட்டும் மாற்றமே இல்லாமல் அப்படியே இருக்கிறார். ஒரு சீன் முடிந்துவிட்டால், மரத்தடியில் எல்லாரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து பேசுவார்கள்.

மரத்தடியில் உடை மாற்றும் நடிகைகள்

ரோட்டிலேயே லுங்கி, சட்டையை ரஜினி சார் மாற்றி கொள்வார். 4 சேலைகளை மரத்தை சுற்றி பிடித்து, அதற்குள் நடிகைகள் சேலையை மாற்றிக் கொள்வார்கள்.. இன்று திரிஷா, நயன்தாரா போல, அன்று ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களே மரத்தடியில்தான் உடைகளை மாற்றுவார்கள்.

ஆனால், இன்று ஒரு ஷாட் முடிந்ததுமே உடனே கேரவனுக்குள் சென்றுவிடுகிறார்கள்.. பல கோடிகளை முதலீடு செய்து படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்களே, ஹீரோவை பார்க்க வேண்டுமானால், கேரவன் வெளியே காத்து நிற்க வேண்டியிருக்கிறது.

காணாமல் போன பட நிறுவனங்கள்

துக்க செய்தி, நல்ல செய்தி எதுவானாலும் யாரும் இன்று பங்கேற்பதில்லை. ஒருவர் இறந்துவிட்டால், அதற்கு வருத்தம் கூட தெரிவிப்பதில்லை. முன்பெல்லாம் ஒரு நடிகருக்கு உடம்பு சரியில்லையானால், டாப் ஸ்டார்களே நேரடியாக மருத்துவமனை சென்று பார்த்து, என்ன உதவி வேண்டும் என்று கேட்டு செய்வார்கள். அது ஒரு பொற்காலம். இன்று திரையுலகமே மாறிவிட்டது.

இன்றைக்கு சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை சொல்ல தெரியவில்லை. அன்று சினிமா பல லட்சங்களில் படங்கள் எடுக்கபபட்டன.. ஏவிஎம் தயாரிப்பில் எஜமான் படம், வெறும் 4 கோடியில் எடுத்தாங்க.. இதையே அதிகம் என்று ஏவிஎம் அப்போது நினைத்தது.. ஆனால் இன்றைக்கு 200 கோடி இல்லாமல் எந்த ஹீரோவையும், தயாரிப்பாளர்கள் சந்திக்க முடியாது.

சிவகார்த்திகேயன் ரூ.100 கோடி

சன்பிக்சர்ஸ், லைகா என்று 2, 3 நிறுவனங்கள்தான் இன்று உள்ளன. கலைப்புலி தாணு ஏராளமான படங்களை தயாரித்தவர்.. அவரே இன்றைக்கு படம் எடுக்க யோசிக்கிறார். ஏவிஎம், ஜெமினி நிறுவனங்களுமே மெல்ல ஒதுங்கிவிட்டன.

டெக்னாலஜி வளருவது நல்ல விஷயம்தான்.. அப்போதுதான் புதிய விஷயங்களை சொல்ல முடியும்.. ஆனால், பட்ஜெட்டில்தான் எல்லாமே இடிக்குது.. 2 ஹிட் தந்த பிரதீப் ரங்கநாதன் 50 கோடி கேட்கிறார்.. அமரன் ஹிட் தவிர வேறு எந்த ஹிட்டும் தராத சிவகார்த்திகேயன் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். நயன்தாரா 20 கோடி, திரிஷா 15 கோடி கேட்கிறாங்க.

பசுமையான காலகட்டம்

இப்படி கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்குமா? என்பதை யோசிப்பதில்லை. கோடிகளை கொட்டி படம் எடுத்து நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளர்கள் ஏராளமானோர் உண்டு.

அன்றைய சினிமா பசுமையாக இருந்தது.. இன்றைய சூழலில், பட்ஜெட் எகிறி, தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள்.. அன்றைய காலம் போல இன்றும் சினிமா இருக்க வேண்டுமானால், நடிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
English summary
rs200 crore salary for Top Hero and 80s golden age of cinema, Super Actresses changed Dress under a tree
Read Entire Article