ரூ.20 லட்சத்தில் தொடங்கி ரூ.23.75 கோடி வரை..! என்ன சொல்கிறார் வெங்கடேஷ் ஐயர்!

1 day ago
ARTICLE AD BOX

கேப்டன் பதவி வந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தலைமைத் தாங்க தயார் என்று கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 2-வது முறையாக கோப்பையை வென்ற கேகேஆர் அணி 2025 ஆம் ஆண்டுக்கான தொடரில் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கிறது.

வருகிற மார்ச் 23 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். அதன்பின்னர் அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

இதையும் படிக்க |இந்த பாக். அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது..!

கேகேஆர் அணியில் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் கேப்டன்ஷிப் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “நிச்சயமாக... தயாராக இருக்கிறேன். மீண்டும், நான் எப்போதும் இதைச் சொல்லி வருகிறேன்.

கேப்டன்சி என்பது வெறும் ஒரு அடையாளம் மட்டும் கிடையாது. தலைமைப் பதவியை நான் நம்புகிறேன். அணியின் தலைவராக இருப்பது ஒரு பெரிய விஷயம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும், தலைமைப் பதவியை மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

கேப்டனாக இருந்தாலும் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கலாம். ரூ.20 லட்சத்தில் அணியில் இணைந்து தற்போது ரூ.20 கோடி வரை உயர்ந்திருப்பது மிகவும் புதுமையாக இருக்கிறது” என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை 2021 ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், 2024 ஆம் ஆண்டு துபையில் நடந்த ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு தக்கவைத்துக்கொண்டது. இதுவரை கேகேஆர் அணிக்காக 51 போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிக்க | அதிக ரன்கள் குவித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!

Read Entire Article