ரூ. 2.70 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: மூவா் கைது

1 day ago
ARTICLE AD BOX

தில்லியில் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 2.70 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ஜன.20-ஆம் தேதி ஸ்வரூப் நகரில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, போதைப் பொருளுடன் இருந்த புஷ்பா மற்றும் ஆவேஷ் என்ற பிட்டு ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், திலக் நகரைச் சோ்ந்த அவ்தாா் சிங் என்ற ரிக்கி கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், புஷ்பா போதைப் பொருளை வாங்கி, அதை சிறிய பாக்கெட்டுகளாக மாற்றி, ஹைதா்பூா் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் பிட்டு மூலம் விநியோகித்ததும், புஷ்பாவுக்கு போதைப் பொருள்களை ரிக்கி வழங்கியதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து ரூ. 2.70 கோடி மதிப்புள்ள 512 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Read Entire Article