ரூ.1500+ரூ.1000..இனிமே மாதம் ‘இவங்களுக்கும்’ மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன அசத்தலான அறிவிப்பு

22 hours ago
ARTICLE AD BOX

ரூ.1500+ரூ.1000..இனிமே மாதம் ‘இவங்களுக்கும்’ மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன அசத்தலான அறிவிப்பு

Chennai
oi-Rajkumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது தகுதி உள்ள மகளிர்க்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற்று கொண்டிருக்கும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு அறிவிப்புகள் இருக்கிறது.

Magalir Urimai Scheme Geetha Jeevan Tamil Nadu Budget 2025

குறிப்பாக அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் விரைவில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கூறி இருந்தார். இதனால் தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார் அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது கீழ்வேளூர் தொகுதியில் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நாகை மாலி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், குழந்தைகள் நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், கடந்த ஆண்டு அனுமதியளிக்கப்பட்ட 1503 மையங்களில் 1203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய 500 கட்டிடங்கள் கட்ட முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக" கூறினார்.

தொடர்ந்து மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிமை தொகை மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என எம்எல்ஏ தங்கமணி கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்," மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்றாலும் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை பெறலாம் என விதிவிலக்கு உள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெரும் குடும்பத்தில் உள்ள மகளிர்க்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என தெரிவித்தார். இதனால் மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பத்திற்கு 1500 ரூபாய் வழக்கமான உதவித் தொகையுடன் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை: தமிழகத்தில் முன்னதாக மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றனர். மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது. அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
Tamil Nadu Minister Geetha Jeevan confirms that women in families receiving disability assistance will also get ₹1000 under the Magalir Urimai Scheme. The TN Budget 2025-26 ensures universal eligibility.
Read Entire Article