ரூ.130 கோடி சொத்து இருக்கு... ஆனாலும் Uber ஓட்டும் கோடீஸ்வரர் - காரணம் என்ன?

1 day ago
ARTICLE AD BOX

World Bizarre News: அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் டில்ஸ் தமாகா. இதன் நிறுவனர் வினீத் சமீபத்தில் அவரது X பக்கத்தில் போட்ட ஒரு பதிவில், அவர் பயணித்த ஊபேர் கார் ஓட்டுநர் குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்திருந்தார். அந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

World Bizarre News: ஊபேர் ஓட்டுநரின் சொத்து மதிப்பு

வினீத் சந்தித்த அந்த நபர் மத்திய கிழக்கில் பிரபலமான எண்ணெய் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோடீஸ்வரர் ஆவார். அதாவது, அந்த ஓய்வுபெற்ற நபரின் சொத்து மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலரை தாண்டுமாம். அதாவது இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.130 கோடி ஆகும்.

அந்தளவிற்கு சொத்துகளை வைத்திருக்கும் ஒருவர் ஏன் ஊபேர் ஓட்டுநராக செயல்படுகிறார் என்பதே அந்த பதிவின் சுவாரஸ்யங்களில் ஒன்றாகும். இதுகுறித்து அந்த பதிவில்,"நான் பார்த்த ஊபேர் ஓட்டுநருக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வீடு இருக்கிறது. பல்கேரியாவில் 3.5 மில்லியன் ஈரோ மதிப்பில் சொத்துகளை வைத்திருக்கிறார். அவரது மூன்று பிள்ளைகளை பெரியளவில் பணம் சம்பாதிக்கிறார்கள். ஒருவர் லண்டனில் வழக்கறிஞராக உள்ளார், மற்ற இரண்டு பேரும் ஐரோப்பிய கால்பந்து அணியில் வீரராக இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | கன்னித்தன்மையை ஏலம் விட்ட இளம்பெண்.... 18 கோடிக்கு ஏலம் எடுத்த ஹாலிவுட் நடிகர்

World Bizarre News: பொழுதுபோக்குக்காக...

இவர் அமெரிக்காவில்தான் வசிக்கிறார், இவரது மனைவியும் பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துக்கள் இருக்கின்றன, இருந்தும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். காரணம், அவருக்கு பொழுது போகவில்லையாம், எனவே அவர் ஊபேர் ஓட்டுகிறாராம்" என குறிப்பிட்டுள்ளார்.

World Bizarre News: நெட்டிசன்களின் கருத்து

இந்த பதிவை அவர் மார்ச் 11ஆம் தேதி பகிர்ந்துள்ளார். தற்போது வரை இந்த X பதிவு சுமார் 84.5 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். பலரும் அவரது பதிவில் கமெண்ட் செய்து தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் ஒரு ஊபேர் ஓட்டுநர் எப்படி அவரது சொத்து மதிப்பு உள்ளிட்டவற்றை ஒரு அந்நிய நபரிடம் கூறுவார் என சந்தேகிக்கின்றனர்.

இதேபோல், தனக்கு ஒரு அனுபவம் இருந்ததாக ஒருவர் பதிவிட்டுள்ளார். "எனக்கும் ஒரு முறை இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. நான் சென்ற விமானத்தில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அன்றிரவு உடனே வீடு திரும்ப வேண்டும் என்றாகிவிட்டது. என்னுடைய ஓட்டுநர் ஒரு பஞ்சாபி, அவருடைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சுமார் 10 மில்லியன் டாலர்கள் உள்ளன. எனக்கு 20 அமெரிக்க டாலர் பில் இருந்தது, நான் அவருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் 'என்னுடைய கடின உழைப்புக்கு டிப்ஸ் கொடுக்கிறீர்கள்...' என்றார்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இனி நடப்பதே கஷ்டம்... பூமிக்கு வந்த பின் சுனிதா வில்லியம்ஸிற்கு வரும் பிரச்னைகள்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article