ரூ.10,000 டிஸ்கவுண்ட்.. பிப்.28 முதல் Open Sale.. ரூ.59,900 iPhone 16e மாடலை ரூ.49,900 க்கு வாங்குவது எப்படி?

6 hours ago
ARTICLE AD BOX

ரூ.10,000 டிஸ்கவுண்ட்.. பிப்.28 முதல் Open Sale.. ரூ.59,900 iPhone 16e மாடலை ரூ.49,900 க்கு வாங்குவது எப்படி?

Mobile
oi-Muthuraj
| Published: Thursday, February 27, 2025, 11:58 [IST]

இந்தியாவில், ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடலின் ஓப்பன் சேல் (Open Sale), அதாவது திறந்த விற்பனை நாளை (2025 பிப்ரவரி 28 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் 16இ மாடலின் ஆரம்ப விலை ரூ.59,900 முதல் தொடங்குகிறது

இருப்பினும் புதிய ஐபோன் 16இ மாடலின் மீது ரூ.10,000 தள்ளுபடியை பெற்று அதை ரூ.59,900 க்கு பதிலாக ரூ.49,900 க்கு வாங்க முடியும். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களில் ஒன்றான ரெடிங்டன் (Redington) தான் ஐபோன் 16இ மீது ரூ.10,000 டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது. இந்த டீல் எவ்வாறு செயல்படுகிறது என்கிற விவரங்கள் இதோ:

ரூ.59,900 iPhone 16e மாடலை ரூ.49,900 க்கு வாங்குவது எப்படி?

ஐபோன் 16இ மீது ரெடிங்டன் ஆனது பல பேங்க் ஆபர்களை அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளின் கீழ் ஐபோன் 16இ மாடலை வாங்கும் போது ரூ.4,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும். இதன்கீழ் ஐபோன் 16இ மாடலின் விலையை ரூ.59,900 இல் இருந்து ரூ.55,900 ஆக குறைக்க முடியும்

இதோடு ரெடிங்டன் ஆனது புதிய ஐபோன் 16இ மீது ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் அறிவித்துள்ளது. அதாவது, உங்களிடம் பழைய போன் இருந்தால், அதை ட்ரேட் செய்து ஐபோன் 16இ மாடலின் விலையில் ரூ.6,000 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 16இ மாடலின் மேலும் ரூ.6000 வரை குறைத்து, மொத்தம் ரூ.10,000 வரை டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.59,900 க்கு பதிலாக ரூ.49,900 க்கு வாங்க முடியும்.

குறிப்பிடத்தக்க வகையில், உங்கள் பழைய போனுக்கு ஈடாக எவ்வளவு பணம் பெறுகிறீர்கள் என்பது ரெடிங்டனின் மதிப்பீட்டு கொள்கை மற்றும் உங்கள் போனின் நிலை மற்றும் நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் மாடலை பொறுத்தது. ரெடிங்டனின் இந்த சலுகை நாடு முழுவதும் உள்ள அதன் அனைத்து ஸ்டோர்களில் செல்லுபடியாகும்; பிப்.28 காலை 8 மணி முதல் ஐபோன் 16இ மாடல் விற்பனை ஆரம்பமாகும்.

ஐபோன் 16இ டிசைன் மற்றும் டிஸ்பிளே: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும். கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது.

ஐபோன் 16இ சிப்செட்: இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும். ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது.

மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, நியூரல் என்ஜின் ஏ13 -ஐ விட இது ஆறு மடங்கு வேகமாக ஏஐ மாடல்களை செயலாக்க முடியும்.

எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்

ஐபோன் 16இ கேமரா: இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.

இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது. இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது.

ஐபோன் 16இ பேட்டரி லைஃப் மற்றும் கனெக்டிவிட்டி: இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன்மூலம் குறைந்த செல்லுலார் கவரேஜ் உள்ள பகுதிகளில் கூட தகவல்தொடர்புக்கான விருப்பங்கள் கிடைக்கும். சுவாரஸ்யமாக இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது - இது கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும்.

ஐபோன் 16இ விலை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆப்ஷன்களுமே ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
How to Buy Apple New iPhone 16e For Rs 49900 Instead of Rs 59900 Sale Starting February 28
Read Entire Article