ரூ.1 லட்சம் வரை சம்பளம் உயரலாம்? 8வது ஊதியக்குழுவால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

1 day ago
ARTICLE AD BOX

8th Pay Commission Salary Hike: அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள உயர்வு குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. அதாவது எட்டாவது ஊதியக்குழுவில் பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்படலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான லெவல் ஒன்று முதல் ஆறு வரையிலான ஊதிய அளவை ஒருங்கிணைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனவே அரசாங்கம் இந்த இணைப்பை அங்கீகரித்து 2.86 ஃபிட்மென்ட் காரணிகள் பயன்படுத்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு கிடைக்கும். 

தற்போது ஏழாவது ஊதிய குழுவின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளம் 18 நிலைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் நிலை ஒன்று, அதாவது மாதம் 18 ஆயிரம் ரூபாய் முதல் நிலை 18, அதாவது மாதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை அடங்கும். 

ஊதியளவு ஒருங்கிணைக்கப்பட்டு 2.86 ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும். இந்த முன்மொழியப்பட்ட மாற்றம் ஒன்று முதல் ஆறு வரையிலான நிலை ஊழியர்களுக்கு பயனளிக்கும். 

தற்போது நிலை ஒன்று ஊழியர்கள் மாதம் 18,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் மற்றும் நிலை இரண்டு ஊழியர்கள் மாதம் 19,900 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். இணைந்த பிறகு புதிய சம்பளம் மாதம் 51 ஆயிரத்து 480 ரூபாயாக இருக்கலாம். 

நிலை மூன்று மற்றும் நிலை நான்கு ஊழியர்களின் சம்பளம் இணைந்த பிறகு மாதம் 72,930 ரூபாய் வரை அதிகரிக்கலாம்.  இந்த நிலைகளை ஒருங்கிணைப்பதன் விளைவாக மாதத்திற்கு 10,1244  வரை சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

எட்டாவது ஊதியக்குழுவில் ஊதிய அளவை ஒருங்கிணைப்பதற்கான முன்மொழிவு மத்திய ஊழியர்களுக்கு ஒரு சாதகமான நடவடிக்கைதான். ஒருவேளை இது செயல்படுத்தப்பட்டால் குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும்.

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்: கூடுதல் ஓய்வூதியம் முதல் பதவி உயர்வு வரை..... காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்புகள்

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு : கேட்டது என்ன, கிடைத்தது என்ன? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்!

மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வுடன் பதவி உயர்வு விதிகளிலும் மாற்றம்... ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ\

 

Read Entire Article