ரூ.1 லட்சம் டூ ரூ.5.38 லட்சம்.. பணம் சம்பாதிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்க முடியுமா??

6 hours ago
ARTICLE AD BOX

ரூ.1 லட்சம் டூ ரூ.5.38 லட்சம்.. பணம் சம்பாதிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்க முடியுமா??

News
Published: Friday, February 28, 2025, 12:45 [IST]

இந்தியாவில் முதலீட்டாளர்கள் அதிகமாக கவனம் செலுத்தும் இடம் மியூச்சுவல் ஃபண்டுகள். குறிப்பாக, ஸ்மால் கேப் (Small Cap) மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக வளர்ச்சி பெற்ற சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்வதால், அதிக வருமானத்தைக் கொண்டுவரும் தன்மை கொண்டவை. ஆனால், அதிக வருமானம் என்பதுடன், இதில் தொடர்புடைய அபாயங்களும் (Risk) அதிகம் இருக்கும். எனவே, நீண்ட கால முதலீட்டை நோக்கி செயல்படும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

AMFI (Association of Mutual Funds in India) தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட சில ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் வருடத்திற்கு 27.42% முதல் 40% வரையான வருமானத்தை வழங்கியுள்ளன. இந்த நிதிகள், நிஃப்டி ஸ்மால் கேப் 250 மொத்த வருமான குறியீட்டின் (Nifty Smallcap 250 TRI) 24.16% வருமானத்தை தாண்டி சிறப்பாக செயல்பட்டுள்ளன.

ரூ.1 லட்சம் டூ ரூ.5.38 லட்சம்.. பணம் சம்பாதிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்க முடியுமா??

கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் : Quant Small Cap Fund - வருடாந்திர வருமானம் (CAGR%)-40%, ஆண்டுகளில் ரூ.1 லட்சத்திற்க்கு ரூபாய் 5.38 லட்சமாக வளர்ந்துள்ளது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்வதால், மிகுந்த வளர்ச்சி அதிக அபாயத்துடன் கூட, இந்த நிதி அதிக லாபத்தை வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சிறந்த Small Cap Fund என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் அதிக அபாயம் (High Risk) உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், நீண்ட காலம் (Long-term Investment) வைத்திருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்

தங்கம் வாங்குவோருக்கு சூப்பர் ஜாக்பாட்.. இன்று நகை வாங்க செம சான்ஸ்.. விலை ரொம்ப கம்மி.!!தங்கம் வாங்குவோருக்கு சூப்பர் ஜாக்பாட்.. இன்று நகை வாங்க செம சான்ஸ்.. விலை ரொம்ப கம்மி.!!

Nippon India Small Cap Fund-வருடாந்திர வருமானம் (CAGR%)29.52%, ஆண்டுகளில் ரூ.1 லட்சத்திற்க்கு ரூபாய் 3.64 லட்சம் வளர்ந்துள்ளது. சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியில் அதிக மையக்குவிப்பு. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றது. பாதுகாப்பாகவும், நிலையான வருமானத்தையும் கொடுக்கக்கூடியது. இது அபாயம் குறைந்த (Moderate Risk) Small Cap Fund ஆகும். அதிக லாபம் தேடும் முதலீட்டாளர்கள் குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

Bank of India Small Cap Fund வருடாந்திர வருமானம் (CAGR%)28.77%, ஆண்டுகளில் ரூ.1 லட்சத்திற்க்கு ரூபாய் 3.54 லட்சமாக வளர்ந்துள்ளது. வளர்ச்சியை நோக்கி முன்னேறும் புதிய தொழில் நிறுவனங்களில் முதலீடு. உயர் வருமானம், ஆனால் அபாயத்துடன் கூடியது. இந்த Mutual Fund நல்ல வளர்ச்சி பெற்றுள்ளாலும், அபாயம் (Risk) கணிசமாக இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் தயவுசெய்து இதை நீண்ட கால முதலீடாகவே (Long Term Investment) பயன்படுத்த வேண்டும்.

ஏப்ரல் 1,2025 முதல் புதிய TDS, TCS விதிகள் - உங்கள் பணத்துக்கு லாபமா? இழப்பா?ஏப்ரல் 1,2025 முதல் புதிய TDS, TCS விதிகள் - உங்கள் பணத்துக்கு லாபமா? இழப்பா?

Tata Small Cap Fund வருடாந்திர வருமானம் (CAGR%)28.31%, ஆண்டுகளில் ரூ.1 லட்சத்திற்க்கு ரூபாய் 3.48 லட்சமாக வளர்ந்துள்ளது. Tata குழுமத்தின் நிதானமான வளர்ச்சி கையாளும் திறன். மிகுந்த லாபத்துடன், முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கும். நிதானமான மற்றும் நிலையான வளர்ச்சி எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Canara Robeco Small Cap Fund வருடாந்திர வருமானம் (CAGR%)27.42%, ஆண்டுகளில் ரூ.1 லட்சத்திற்க்கு ரூபாய் 3.36 லட்சமாக வளர்ந்துள்ளது. சீரான வளர்ச்சியுடன் நல்ல முதலீட்டு வாய்ப்பு. அதிக அபாயம் இல்லாமல், நல்ல வருமானம் வழங்கும். மிதமான அபாயத்துடன் (Moderate Risk), நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறந்த Mutual Fund ஆக இருக்கும்.

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள 5 Mutual Funds அனைத்தும், Nifty Small Cap 250 TRI (Total Return Index) அடிப்படையில் செயல்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த குறியீடு வருடத்திற்கு 24.16% வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், மேலே கூறிய Mutual Funds இந்த அளவை தாண்டி அதிகமான வருமானம் வழங்கியுள்ளன. உயர்ந்த வருமானம் தேவை என்றால் Quant Small Cap Fund சிறந்த தேர்வு. நிலையான வளர்ச்சி தேவை என்றால் Nippon India Small Cap Fund மற்றும் Tata Small Cap Fund சிறந்த தேர்வாக இருக்கும். மிதமான அபாயத்துடன் நல்ல வருமானம் தேவை என்றால் Canara Robeco Small Cap Fund மற்றும் Bank of India Small Cap Fund நல்ல தேர்வாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Turn Rs.1 lakh into Rs.5.38 lakh! Top-performing small cap mutual funds you can't afford to miss!!

Investing in top-performing Small Cap Mutual Funds can turn Rs.1 Lakh into Rs.5.38 Lakh in just 5 years! With high growth potential and strong returns, these funds are a great choice for long-term investors. Choose wisely, stay invested, and watch your wealth grow!
Other articles published on Feb 28, 2025
-->
Read Entire Article
LEFT SIDEBAR AD

Hidden in mobile, Best for skyscrapers.