ARTICLE AD BOX
ரூ.1.1 கோடி கொடுத்தால் குடியுரிமை.. லலித் மோடி எஸ்கேப் ஆக முயன்ற வனுவாடு நாடு பற்றி தெரியுமா
வனுவாட்டு: இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க லலித் மோடி வனுவாட்டு நாட்டின் குடியுரிமையைப் பெற முயன்றார். இது தெரிந்த உடன் வனுவாட்டு அந்த பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. இது ஒரு பக்கம் இருக்க லலித் மோடியால் எப்படி வனுவாட்டு பாஸ்போர்ட் பெற முடிந்தது என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர் நடத்தும்போது மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி லலித் மோடியை மத்திய அரசு தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர் இப்போது லண்டனில் வசித்து வரும் சூழலில், அவரை நாடு கடத்தும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அதில் இருந்து தப்பிக்கவே அவர் வனுவாட்டு பாஸ்போர்ட் பெற முயன்றார். அவரால் எப்படி சீக்கிரம் வனுவாட்டு பாஸ்போர்ட் பெற முடிந்தது என்ற கேள்விக்கான பதிலை நாம் பார்க்கலாம்.

தீவு நாடு வனுவாட்டு
வனுவாட்டு என்பது ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கிலும் நியூசிலாந்தின் வடக்கிலும் அமைந்துள்ளது. இந்த வனுவாட்டு தீவில் மொத்தம் 83 சிறிய எரிமலை தீவுகள் உள்ளன. அதில் 65 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றன. இதன் வடக்கு எல்லை அமைந்துள்ள தீவுக்கும் தெற்கு எல்லையில் அமைந்துள்ள தீவுக்கும் இடையே உள்ள தூரம் 1,300 கிமீ ஆகும். இது கிட்டதட்ட டெல்லிக்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான தூரமாகும்.
இந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பு 12,199 சதுர கிமீ. அதாவது கிட்டதட்ட நமது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை விட ஒன்றரை மடங்கு மட்டுமே அதிகம். வனுவாட்டுவின் 14 தீவுகள் மட்டுமே 100 சதுர கிமீக்கு மேல் பரப்பளவைக் கொண்டுள்ளன. அதில் மிகப் பெரிய தீவு என்றால் அது எஸ்பிரிட்டு சாண்டோ என்ற தீவு. அதன் பரப்பளவு 3,955 சதுர கிமீ ஆகும்.. ஆனால், அந்நாட்டின் தலைநகரான போர்ட் விலா வனுவாட்டுவில் மூன்றாவது பெரிய தீவான எஃபேட் தீவில் அமைந்துள்ளது. அது சுமார் 900 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டதாகும்
மக்கள் தொகை எவ்வளவு
கடந்த 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வனுவாட்டுவின் மொத்த மக்கள் தொகை 3,00,019ஆகும். இது நமது நாட்டின் பெரும்பாலான மெட்ரோ நகரங்களின் மக்கள்தொகையை விடக் குறைவாகும். அங்கு மக்கள் தொகை வளர்ச்சியும் கூட 2.3% என்று மிக குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு முதல் தனது குடியுரிமை விற்று வருகிறது.
குடியுரிமையைப் பெறுவதால் என்ன பலன்?
இந்த குட்டி நாட்டிற்கு யார் குடியுரிமையை வாங்குவார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆனால், இந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்போருக்கு ஏகப்பட்ட சலுகைகள் இருக்கிறது. அதாவது சுமார் 100+ நாடுகளுக்கு வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்போர் விசா இல்லாமல் சென்று திரும்பலாம். மேலும், வருமான வரி இல்லை. உலகின் எந்த பகுதியில் உங்களுக்கு வருமானம் வந்தாலும் அதற்கும் வரி கட்ட தேவையில்லை.
எவ்வளவு செலவாகும்?
இப்படி ஏகப்பட்ட சலுகைகள் இருப்பதாலேயே வனுவாட்டு குடியுரிமை பெறப் பலரும் விரும்புகிறார்கள். இங்குக் குடியுரிமை பெற ஒருவர் குறைந்தபட்சம் 1.30 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.13 கோடி) முதலீடு செய்ய வேண்டும். அதேநேரம் ஒரு தம்பதி குடியுரிமை பெற வேண்டும் என்றால் 1.50 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.30 கோடி) முதலீடு செய்ய வேண்டும்.
அதேபோல ஒரு தம்பதி மற்றும் அவர்களின் ஒரு குழந்தை என்றால் 1.65 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.1.44 கோடி), ஒரு தம்பதி மற்றும் அவர்களின் இரு குழந்தை என்றால் 1.80 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.1.57 கோடி) முதலீடு செய்ய வேண்டும். இது தவிர சில கட்டணங்களும் உள்ளன. இந்த முதலீடு மற்றும் கட்டணத்தைச் செலுத்தினால் 60 முதல் 90 நாட்களில் ஒருவருக்குக் குடியுரிமை கிடைத்துவிடும்.
இவ்வளவு ஈஸியாக குடியுரிமையை வாங்கலாம் என்பதாலேயே பலரும் வாங்குகிறார்கள். வனுவாட்டு நாட்டின் மொத்த வருமானத்தில் சுமார் 30% இப்போது குடியுரிமையை விற்பதன் மூலமே கிடைக்கிறது. இதன் காரணமாகவே பலரும் இங்குக் குடியுரிமை பெற விரும்புகிறார்கள்.
பேக் கிரவுண்ட் செக்
அதேநேரம் முதலீடு செய்யும் அனைவருக்கும் குடியுரிமை தந்துவிட மாட்டார்கள். அப்படிச் செய்தால் பயங்கரவாதிகளும் கூட இப்படி குடியுரிமை பெற்றுவிடுவார்கள் என்பதால் விசாரணைக்கு பிறகே அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும். இதை ஆங்கிலத்தில் பேக் கிரவுண்ட் செக் என்பார்கள். இதை எல்லாம் முடித்து 60- 90 நாட்களில் பாஸ்போர்ட்டை கொடுத்துவிடுவார்களாம்.
லலித் மோடி விவகாரம்
லலித் மோடியும் கூட இதுபோல முதலீடு செய்தே குடியுரிமையைப் பெற முயன்றதாகத் தெரிகிறது. அவர் இப்போது பிரிட்டனில் உள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் இருந்து தப்பவே அவர் வனுவாட்டு பாஸ்போர்ட் பெற முயன்றார். அவர் என்னதான் இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்தாலும் இன்டர்போல் இதுவரை அவரை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கவில்லை.
இதனாலேயே பேக் கிரவண்ட் செக்கில் அவர் தப்பித்தாக சொல்கிறது வனுவாட்டு அரசு. இருப்பினும், கடந்த சில நாட்களாக அவருக்கு பாஸ்போர்ட் கொடுத்தது சர்ச்சையாக வெடித்ததால் வனுவாட்டு அரசு அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
- கையால் சாப்பிடுறாங்க, கழிப்பறைக்கு தண்ணீர்! வினோதமான நாடு இந்தியா!அமெரிக்க பெண்ணின் பதிவு டிரெண்டிங்
- குடியுரிமையை வைத்து பெரிதாக திட்டம் போட்ட லலித் மோடி! இப்போது வசமாக சிக்கிவிட்டார்! எப்படி பாருங்க
- டிரம்பை விடுங்க.. பெப்சி vs கோகோ கோலா "வர்த்தக" போர் தெரியுமா! யார் பெஸ்ட்னு அடிச்சு காட்டுங்க
- இதெல்லாம் ஒரு டிரெண்டா.. ஒரு காலில் ஜீன்ஸ்.. ஒரு காலில் டவுசர்.! ஆனா விலையை கேட்டால் தலை சுத்துதே!
- 61 வயதிலும் இளமை! "இந்த" இரண்டை மட்டும் செய்யுங்க போதும்.. சீக்ரெட் பகிர்ந்த நீதா அம்பானி! ரொம்ப ஈஸி
- தாலிபான் நாட்டில் பிரபல ஆபாச பட நடிகை! ஆப்கானில் எடுத்த போட்டோ! கையில் என்ன பாருங்க! வெடித்த சர்ச்சை
- அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திமுக அரசு - தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு