ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

6 hours ago
ARTICLE AD BOX

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரி திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டு நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணியின் இடம்பிடித்திருந்தார் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த். இந்த நிலையில் உத்தரகாண்டில் உள்ள முசோரியில் நடைபெறும் அவரது சகோதரி சாக்‌ஷி பந்தின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக உடனடியாக துபையில் இருந்து தாயகம் திரும்பினார்.

ரிஷப் பந்தின் சகோதரி சாக்‌ஷி பந்த், அவரின் நீண்ட கால காதலரான அங்கித் சௌத்ரி இருவரின் திருமணம் இன்று நடைபெறுகிறது. மெஹந்தி, சங்கீத் மற்றும் ஹால்டி விழாக்களில் ரிஷப் பந்த் பங்கேற்றார். திருமண விழாக்களின் புகைப்படங்கள் மற்றும் விடியோகளை சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

நேற்று இரவு நடைபெற்ற ஹால்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அவரது மனைவி சாக்‌ஷியுடன் செவ்வாய்க்கிழமை மாலை முசோரிக்கு வந்தார். தோனி மட்டுமின்றி ரெய்னாவும் அவரது மனைவியும் இந்தவிழாவில் கலந்துகொண்டார்.

தோனி, ரெய்னா, பந்த், மற்றும் சில நண்பர்கள் தோள் மீது கைகோர்த்து நடனமாடும் விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி வென்ற பின்னர் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பியிருப்பதால், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்

Rishabh Pant , MS Dhoni & Suresh Raina dancing together pic.twitter.com/b03FSVUvGv

— Riseup Pant (@riseup_pant17) March 11, 2025
Read Entire Article