ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை.. 14 பேர் கைது! நடுக்கடலில் பரபரப்பு

3 hours ago
ARTICLE AD BOX

ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை.. 14 பேர் கைது! நடுக்கடலில் பரபரப்பு

Tamilnadu
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தாக சொல்லி 14 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களின் ஒரு விசைப்படகையும் சிறைபிடித்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கப் போகும்போது எல்லாம் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை கைது செய்யும் போக்கு தொடர் கதையாக உள்ளது.

Rameswaram Sri lanka

இடையில் சில காலம் மட்டும் கைது செய்யும் போக்கு குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் சமீப காலங்களாகக் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். மேலும், தமிழக அரசு தரப்பிலும் இதுபோன்ற கைதுகளைத் தடுக்க இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

இருப்பினும், மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை அராஜகமாகக் கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.. மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய ஒரு விசைப்படகையும் சிறைபிடித்துள்ளனர்.

இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
English summary
Sri Lankan navy arrests 14 Rameswaram fishermen who were fishing near Gulf of Mannar (கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கைது): All things to know about Fishermen arrest in Gulf of Mannar.
Read Entire Article