ராமநாதபுரம்: வீட்டின் முன்பு அறுந்து தொங்கிய மின்கம்பி உரசி பெண் உயிரிழப்பு

3 days ago
ARTICLE AD BOX
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ஜான்சிராணி (37 வயது). இவர்களுக்கு யோகஸ்ரீ (13 வயது) என்ற மகளும், யோகேஷ் (9 வயது) என்ற மகனும் உள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான் இவர்கள், புதிதாக வீடு கட்டி குடியேறினர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஜான்சிராணி தூங்கி எழுந்து வீட்டு வாசலுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு குறுக்கே மின்கம்பி அறுந்து தொங்கி கொண்டு இருந்தது.

அதிகாலை நேரம் என்பதால் இருட்டாக இருந்தது. இதை கவனிக்காமல் நடந்து சென்றபோது ஜான்சிராணியின் கழுத்தில் எதிர்பாராதவிதமாக மின்கம்பி உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் ஜான்சிராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read Entire Article